பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தம்பிரான் தோழர் தமிழகப் பகுதிகள் : தமிழகத்தினை வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் தொல்காப்பியம், ஆகவே, அவர் காலத்தில் தமிழகம் சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு என்று மூன்று மண்டலங்களாகத் திகழ்ந்தன. கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியில் சேரநாட்டின் கிழக்குப் பகுதி கொங்கு மண்டலம்' எனத் தனி மண்டலமாகப் பிகிந்தது. சோழ நாட்டின் வடக்குப் பகுதி தொண்டை கண்டலம் எனத் தனி மண்டலமாகப் பிரிந்தது. ஆகவே தமிழ்நாடு ஐந்து மண்டலமாகப் பிரிந்து திகழ்ந்தது. திருமூலரும் இதனை, தமிழ்மண் டலம் ஐந்து ந் தாவீய ஞானம்" என்று குறிப்பிட்டார். இக்குறிப்பிட்ட ஒவ்வொரு மண்ட லமும் சிறுசிறு தனி நாடுகளாகவும் பகுக்கப்பெற்றுத் திகழ்ந்தன; இந்நாடுகள் யாவும் அவ்வவற்றின் தலையூர் களின் பெயர்களால் குறிக்கப்பெற்றன. இச்செய்தி, மூல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' என வரும் புறப்பாட்டாலும், தம்பிரான் தோழர் பாடியுள்ள தாட்டுத் தொகை 7.12), ஊர்த்தொகை (7.47) போன்ற திருப்பதிகங்களாலும் தெளியலாம். 4. திருமந்திரம்-1645 5. புறம்-242. ஒல்லையூர் என்பது, புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள ஊர்களுள் ஒன்று. இப்போது ஒவிய மங்கலம்' எனற பெயரால் வழங்குகின்றது. இதனைச் சூழ்ந்துள்ள பகுதி ஒல்லையூர் நாடு என வழங்கிற்று. சோழ நாட்டிற்கும் பாண்டி நாட்டிற் கும் எல்லையாக ஓடும் தென் வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் வழங்கின. தென்கோ னாட்டின் மேலைப் பகுதியே ஒல்லையூர் நாடு.