பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் - 221 தேவார ஆசிரியர் காலத்தில் சோழ மண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் தடுவே வடவெள்ளாற்றிற்கும் சேயாற்றிற்கும் இடையே யமைந்த நிலப்பரப்பு திருமுனைப் பாடி நாடு' என ஒரு தனிநாடாகக் கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலப் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள் முனை யரையர்” என்ற பெயரால் வழங்கப்பெற்றனர். நம்பி யாரூரர் காலத்தில் திருமுனைப் பாடி நாட்டை ஆண்ட குறு நிலமன்னர் நரசிங்க முனையரையர் என்பதையும், அவர் நாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார் என்பதை யும், இவர்தான் நம்பியாரூசரை வளர்த்தார் என்பதையும் நாம் அறிவோம். முனைப்பாடி நாட்டின் மேற்றிசை எல்லை யில் உள்ள பகுதி சேதி நாடு என்பது. இந்நாட்டின் தலைநகர் திருக்கோவலூர். பின் வந்தவர்கள் முனைப்பாடி நாட்டை யும் சேதி நாட்டையும் சேர்த்து நடுநாடு என்று வழங்கினர், தமிழகத்தை யொட்டிய வடமேற்கில் உள்ள புறநாடு, துளுவ நாடு’ என்பது. இந்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலம் திருக்கோகாணம்’ ஆகும். தமிழகத்தின் தென்னெல் லையையொட்டிக் கடவின் நடுவே அமைந்த இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஈழநாடு என வழங்கப் பெற்றன. இந்நாட்டிலுள்ள மாதோட்டக் கேதீச்சரம் திருக்கோண மலை என்னும் இரு தலங்களும் தேவார ஆசிரி யர்களின் பாடல் பெற்றவை. தமிழகத்தின் வடஎல்லை யாய்த் திகழும் வேங்கடத்தின் வடக்கே இமயம் வரை, உள்ள திருத்தலங்கள் வடநாட்டுத் தலங்கள்’ என்று வழங்குதல் மரபாக அமைந்தது. தல வகைகள் : தேவார ஆசிரியர்களால் போற்றப் பெற்ற திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலம் எனவும், வைப்புத்தலம்" எனவும் இருவகையாகப் பிரித்துரைத்தலை மரபாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு தலத்தினையும் தனித்தனியே பரவிப் போற்றும் முறையில் தமக்கெனச்