பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 தம்பிரான் தோழர் சம்பந்தர். அப்பர். நம்பியாருரர் ஆகியோர் ஒருவரின் தனித் திருப்பதிகத்தினைப் பெற்ற தலங்கள் முதல் வகையைச் சேர்ந்தவை. இங்ங்ணம் தமக்கெனத் தனிப் பதிகத்தினைப் பெறாது பிறதலத்திற்குரிய பதிகப் பாடல்களிலோ அன்றிப் பொதுப் பதிகங்களிலோ பெயரளவில் குறிக்கப் பெற்றுள்ள திருத்தலங்கள் இரண்டாவது வகையில் அடங்கும். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தேவாரப் பதிகங்களில் தனிப்பதிகம் பெற்றுள்ள பாடல் பெற்ற தலங்கள் 274 உள்ளன. இவற்றுள் சோழநாட்டுத் திருத்தலங்கள் 190; ஈழநாட்டுத் தலங்கள் 2: பாண்டிநாட்டுத் தலங்கள் 14, மலை நாட்டு (சேரநாட்டு)த் தலம் 1; கொங்குநாட்டுத் தலங்கள் 7; நடுநாட்டுத் தலங்கள் 22: தொண்டைநாட்டுத் தலங்கள் 32 துளுநாட்டுத் தலம் 1: வடநாட்டுத் தலங்கள் 5-ஆகப் பாடப் பெற்றவை 274 ஆகின்றன. இங்கே குறித்த 274 தலங்களையும் உமாபதி சிவாச்சாரியர் தமது திருப்பதிக் கோவை என்ற நூலில் தொகுத்துக் கூறியுள்ளார். இந் நூலின் ஆசிரியர் சோழ நாட்டுத் தலங்களை காவிரியாற்றுக்கு வடகரையிலுள்ள தலங்கள் எனவும், தென்கரையிலுள்ள திலங்கள் எனவும் இருவகையாகப் பகுத்து வடகரைத் தலங் கன் 63 எனவும், தென்கரைத் தலங்கள் 127 எனவும் காட்டி 6. பொதுப் பதிகங்கள்-தலத்தின்மீது பாடாமல் இபாதுவாகப் பாடப்பெற்றன். எ.டு. சம்புந்தரின் கோளது.பதிகம், நமச்சிவயப் பதிகம் போன்றவை; அப்பர் பெருமானின் திரு அங்கமாலை, நமச்சிவாயப் பதிகம் போன்றவ்ை; சுந்தரரின் திருநாட்டுத் தோகை திருத்தொண்டத் தொகை போன்றவ்ை. இங்ஙனம், சம்பந்தர் பாடியவை 7; அப்பர் பாடி யவை, 36; இத்தரர் பாடிங்வை, 4. (பன்னிரு திரு இற வரலாறு-பகுதி பிற்சேர்க்கை பத் (732737) காண்க.) 7. வெள்ளை வாரணன், க: பன்னிரு திருமுறை வரலாறு-பகுதி . பிற்சேர்க்கை, விக் (732-737) இசண்க. . - . .