பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 223 யுள்ளார். இந்த நூலில் நம்பியாரூரர் வழிபட்ட தலங்களை மட்டிலும் பின்னிணைப்பில் தொகுத்துக் காட்டியுன்னேன்; பாடிய பதிகங்களையும் குறிப்பிட்டுள்ளேன். தேவார வைப்புத் தலங்கள் 237 எனக் கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் பலவற்றின் நாடு முதலியன நன்கு புலப்படவில்லை. தெரிந்த வற்றுக்குரிய குறிப்புகளுடன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள் எனர்." திருத்தலப் பெயர்கள் வழங்கும் முறை : தேவாரத் திருப்பதிகங்களில் குறிக்கப்பெற்றுள்ள தலங்களின் பெயர் கள் ஒருவித அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளமை சிந்தனைக்கு நல்விருந்து. ஆதித் தமிழர்கள் நில அமைப்பு முறையை நோக்கிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெயரிட்டதை நாம் அறிவோம். இப்பெயர்களை யொட்டியும், இவற்றில் மிகுந்துள்ள கருப்பொருளை கொட் டியும், இங்கு வழிபட்டோர் பெயரோடு அமைந்த திருக் கோயிலை யொட்டியும் திருத்தலங்கள் பெயரிடப் பெற்று வழங்குகின்றன. இங்ங்ணம் அமைந்த பெயர்களைப்பற்றி நம் கருத்தினைச் செலுத்துவோம். நானிலம்பற்றிய பெயர்கள் : (1) குறிஞ்சி நிலத்தில் அமைந்த தலங்கள் மலை, குன்றம், பருப்பதம் என்ற பெயர் களால் வழங்குகின்றன. (எ-டு) திருஈங்கோய் மலை, திரு.அண்ணாமலை, திருக்கோண மாமலை, நொடித்தான் மலை; திருப்பரங்குன்றம், திருக்கொடுங்குன்றம், முது குன்றம், திருக்கழுக்குன்றம்; திருப்பருப்பதம், இந்திர நீலப் பருப்பதம் ஆகியவை. - (2) முல்லை நிலத் தலங்கட்குக் காடு, வனம், பாடி என்ற பெயர்கள் சூட்டப் பெற்றுள்ளன. (எ-டு) சாய்க்காடு, வெண் 8. ೧, ೬ಹ (694-121) rrs.