பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தம்பிபிரான் தோழர் இவைதவிர கடல், ஆறு முதலிய நீர் நிலைகளை நோக்கியோ, அன்றி மலை முதலியவற்றின் நெறிகளை நோக்கியோ எதிர் முகமாக அமைந்த தலங்கள் வாயில் என்று வழக்கப் பெறுகின்றன. (எ.டு) முல்லை வாயில், நெல்வாயில், குட வாயில் என்பன. நதி முதலியன கூடும் இடம் கூடல்' என வழங்கப்பெறுகின்றது. எ.டு: வெஞ்சமாக் கூடல், நான் மாடக் கூடல், திருப்பள்ளியின் முக்கூடல் என்பன. இடைக்காலத்தில் சமணர்கள் தங்கிய தவப்பள்ளிகளாக இருந்து பின்னர்ச் சிவத்தலங்களாக மாறிய இடங்கள் பள்ளி' எனவும். ‘பாழி எனவும் வழங்கப் பெறுகின்றன. (எ-டு) , திருச்சிராப்பள்ளி, சக்கரப் பள்ளி, நனிபள்ளி, அகத்தியான். பன்னி, மயேந்திரப் பள்ளி என்பன: வரதைப் பெருப்பாழி காண்க, ஊர்ப்பெயர்களுடன் நகர், நன்னகர் என்ற சொற்களை ஈற்றில் சேர்த்து வேட்கள நன்னகர், பாம்புர நன்னகர் எனச் சிறப்பித்துப் போற்றும் முறையைப் பதிகங்களில் காணலாம். ஒரூரில் வாழும் சிறப்புடையார் ஒருவர் பெயரால் அவ்வூர் வழங்கப்பெறுதலும் உண்டு. இதுநிறை யினால் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர் அறையுமூர் சாத்தமங்கை (3.58:ti) என்ற சம்பந்தர் திரு ாேக்கால் அதியப்படும். - இல் என்பது குடியிருப்பு என்னும் பொருளுடையது இதனை சற்றாகக் கொண்டு வழங்கும் தலங்களும் உள்ளன. எ.டு: அன்பில், பாச்சில், கீழையில் (வை. த.). பிரம்பில் (வை. த.), செந்தில் (வை. த. கள்ளில், என்பன. அகம்: - என்ற சற்றால் ஏடகம் என வழங்கும் ஊர்ப்பெயரும் ஈண்டு நோக்கத் தக்கதி. குடிகள் பலரும் சேர்ந்து வாழும் சிற் ញក្រៅ 'சேரி என வழங்கப்படும். இச்சொல்லால் இறும் தலங்களும் உள்ளன. (எ-டு): தெளிச்சேரி, இறையான் சேரி {வை. த.).