பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 227 ஊர்களின் தொன்மை நோக்கிப் பழையாறை, பழையனூர் என்றும், புதியனவாக அமைக்கப் பெற்றமை கருதி அரிசிற் கரைப்புத்துர், கடுவாய்க்கரைப் புத்துார், திருப்புத்துனர் கோவந்த புத்துர் (விசயமங்கை) என்றும் வழங்கப்பெறு தலையும் தலப் பெயர்களில் காணலாம். ஒரு தலத்தில் பல கோயில்கள் : ஒரே தலத்தில் பல திருக்கோயில் அமைந்திருப்பின் அவற்றின் திசையைச் சுட்டி, வழங்கும் முறையும் உண்டு. (எ-டு): பழையாறை வடதளி, ஆறை மேற்றளி எனவும்: காஞ்சி மேற்றளி, கச்சித் திருவே கம்பம் ஒனகாந்தன் தளி, கச்சிமயானம், கச்சிநெறிக் காரைக் காடு, கச்சி அநேகங்காவதம் எனவும்; கடவூர் வீரட்டம், கட ஆர் மயானம் எனவும்: திருவாரூர்த் திருமூலட்டானம், திருவாரூர் அரனெறி, திருவாரூர்ப் பரவையுண்மண்டனி எனவும் வருதல் காண்க. ஒரு நாட்டில் ஒரே பெயருடைய பல தலங்கள் இருக்கும் நிலையில் : இங்ங்னம் அமைந்திருப்பின் அவை அமைந் துள்ள திசைபற்றியும், அவற்றின் அருகேயுள்ள ஆறு முதலிய வற்றின் எல்லை பற்றி யும், அங்குள்ள தாவர அமைப்பு, வழி பட்டோர், அத்தலத்தின் பெருமை, பரப்பு முதலியவற்றைக் குறித்த அடை மொழிகளுடன் சேர்த்து வழங்கும் முறையும் உள்ளது. இம்முறையில் அவை இன்னதலங்கள் எனத் தெளி வாக அறிந்து கொள்ள முடிகின்றது. எ-டு: - திசை மேலைத்திருக்காட்டுப்பள்ளி, கீழைத் திருக் காட்டுப் பள்ளி தென்திருமுல்லைவாயில், வடதிரு முல்லை வாயில் என்பன திசைபற்றி வந்த பெயர்கள் எல்லை, வழிபட்டோர் : வடகுரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை என்பன காவிரியாற்றின் வடகரை, தென்கரையாகிய எல்லையற்றியும் அத்தலங்களில் முறையே வழிபட்ட வாவி, சுக்கிரீவன் பெயர்களையும்