பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - தம்பிரான் தோழர் உறுதி கூறிய சிவபெருமான் முதுமை மிக்க வேதியராகத் திருமேனி கொள்ளுகின்றார். தளர்ந்த நடையினராய்த் தண்டுன்றித் திருமணப் பந்தருள் நுழைகின்றார். திருமண விழாவில் குழுமியிருந்த பெருமக்களைத் தம் கவனத்திற்கு ஈர்க்கின்றார். பின்னர் மணமகனாகிய நாவலூரரை நோக்கி, 'தம்பி, எனக்கும் உனக்கும் உள்ள பெரு வழக்கைத் தீர்த்துக் கொண்ட பின்னரே நீ திருமணம் புரிந்து கொள்ளல் வேண்டும்’ என்று கூறுகின்றார். நம்பியாரூரரும், "முதியவரே, எனக்கும் உமக்கும் உண்மையாக வழக்கு, இருக்குமாயின், அதனைத் தீர்க்காமல் திருமணம் புரிந்து 'கொள்ளேன். வழக்கினைச் சொல்லியருள்க’ என்று மறு மொழி பகர்கின்றார். தண்டுன்றி வந்த முதியவர் அங்குக் குழுமியுள்ளவர் களை நோக்கி, மறைப் பெருமக்களே, இவ்வழக்கிணைக் கேளுங்கள். நாவலூரானாகிய இவன், எனக்கு வழிவழி அடியவனாவன்' என்று கூறுகின்றார். இதனைச் செவி மடுத்த அங்கிருந்தோர் அதிர்ச்சியடைகின்றனர். சிலர் அம் முதியோரை இகழ்ந்து, நோக்குகின்றனர்; சிலர் வெகுண்டு நோக்குகின்றனர்; மற்றும் சிலர் வியப்பெய்துகின்றனர். மண மகனாகிய நாவலூரர், “பெரியோய், தும் மொழி நன்று நன்று' என்று கூறி நகைக்கின்றார், அது கேட்ட முதியவர் மணமகன் அருகில் சென்று, சிறுவா, அக்காலத்தில் நின் பாட்டன் வரைந்து தந்த அடிமை யோலை என் கை யிலுள்ளது. இச்செயலை இகழ்ந்து சிரிப்பது ஏன்?' என்று வெகுண்டுரைக்கின்றார். - சினம் கொண்ட நம்பியாரூரர், 'ஐயனே ஓர் அந்தணர் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்பது எங்கும் கேட்கப்பெறாத விநோதச் செயலாக உள்ளது. நீர் சொல்லியே இன்று நான் கேட்கின்றேன். நீ பித்தனோ?” என்கின்றார் மணமகன்,