பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொள்ளப் பெற்ற வரலாறு 1? 'பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீயின் {று எத்தனை தீங்கு சொன்னால் யாதுமற் றவற்றால் நாணேன்." வீண் பேச்சு எதற்கு? பணிசெய்வதே நின்கடன்' என்று கூறுகின்றார், முதியவேதியர். மேலும், நின் பேச்சால் நீ என்னை அறிந்து கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பாயாக' என்கின்றார். நம்பியாரூரர் ஆளோலை உண்டு என்று வேதியர் கூறுவதன் உண்மையை அறிந்து கொள்ள விழைகின்றார். அம்முதியவரை நோக்கி, ஒலையைக் காட்டுமின் என்று கூறுகின்றார். முதியவர் சற்றுச் சினத்துடன் * சிறுவா, ஒலையைக் காண்பதற்கு உன்க்குத் தகுதி உண்டா? அதனை அவையினர் முன்னிலையிற் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப் படுத்துவேன்." என்கின்றார். அம்மொழி யினைக் கேட்டு வெகுண்ட நாவலுர்ரர் விரைந்தெழுந்து முதியவர் கையிலுள்ள ஒலையைப் பறிக்க ஓடுகின்றார். இந் நிலையில் முதியவராய் வந்த இறைவன் பயந்தவர்போல் . பாசாங்கு செய்து விரைந்து ஒடுகின்றார். "மாலயன் தொடராதானை வலிந்து பின் தொடரலுற்றார். இவை யவர் அல்லவா? விரைந்து முதியவரை அடைந்து அவர் கை யிலுள்ள ஒலையைப் பறித்து, 'ஒர் அந்தணர் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை? என்ன அதியாயம்' எனறு சொல்லிக் கொண்டே அதனைக் கிழித் தெறிகின்றார். - ஒலையைப்பறிகொடுத்த முதியவர், "பாருங்கள் இவனது அடாதசெயலை?” என்று அழுதரற்றுகின்றார். அப்பொழுது அருகிலுள்ள சிலர் அவர்களை விலக்குகின்றனர். அருமறை 4. பெ. பு : தடுத்தாட் 41