பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்ெ காள்ளப் பெற்ற வரலாறு 13 மறையவர் முன்னே செல்ல, நம்பியாரூரர் அவரைத் தொடர்ந்து பின் செல்லுகின்றார். இவ்விருவரையும் தொடர்ந்து கலக்கமுற்ற மனத்துடன் உறவினர்களும் உடன் செல்லுகின்றனர். திருவெண்ணெய் நல்லூரை யடைந்த முதியோர் அவ்வூரின் அவையினரை நோக்கி, "நாவலூர்ச் சிறுவன் எனக்கு அடியான். யான் காட்டிய அடிமையோலையை வலிந்து பற்றிக் கிழித்தெறிந்தான். வழக்கை விசாரித்து உண்மையை நிலை நாட்டுவீர்' என்று வேண்டுகின்றார். அவையோர் முதியோரை நோக்கி, "ஐயன்மீர், அந்தணர் அடிமையாதல் உலக வழக்கில் இல்லையே' என்கின்றனர். முதுமறைப்ோர், “பெரியீர்காள், இச்சிறுவன் வவிதிற்பறித்துக் கிழித்தெறிந்த ஒலை இவன் பாட்டன் (தந்தையின் தந்தை) எழுதிக் கொடுத்ததாகும்’ என்று கூறுகின்றார். நம்பி யாரூரை நோக்கி, "உன்பாட்டனார் உளம் இசைந்து எழுதித் தந்த அடிமையோலையை நீ வலிந்து பறித்துக் கிழித்தெறிந்து விட்டால் உம் வழக்கு வெற்றியாகுமா?’ என்று கூறிய முதியோர் வழக்கினை பொருத்தமாக எடுத்துரைக்கின்றார். 'உம்முடைய கருத்து யாது?’ என்று வினவுகின்றனர் அவைப் பெருமக்கள். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நம்பியா ரூரர், கற்றுணர்ந்த பெரியீர், யான் ஆதிசைவன். இம்முதி. யோர் தனக்கு யான் அடிமை என்று சாதிப்பது என் மனத் திற்கு எட்டாத மாயையாக உள்ளது. என் செய்வேன்? தெளிந்துணர இயலவில்லையே' என்று மனம் உடைந்து மொழிகின்றார். அவையினர் கிழவரை நோக்கி, பெரி யோய், நும் வழக்கினை ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள். ஏதாவது ஒன்றைக் கொண்டு இச்சபைமுன் தும் வழக்கினை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்று கட்டளை யிடுகின்றனர். - . ... *