பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தம்பிரான் தோழர் கிழவர் மிகத் திறமையுடன் பேசத் தொடங்குகின்றார். "அவையிலுள்ள சான்றோர்களே, இச்சிறுவன், நாவலூரன், இனமிகுதியால் என் கையிலிருந்த ஒலையைப் பறித்துக் கிழித் தெறித்தான். இது படியோலையே. மூல ஓலை என்னிடம் உள்ளது. தீவிர் இதனை இச்சிறுவன் கிழித்தெறியாதபடிக் காக்க வல்வீராயின், அதனைக் காட்டுவேன்' என்கின்றார் முதியவர். அவையோர் உறுதி கூற, கிழவர் மூல ஓலையை அவையின் முன் வைக்கின்றார். மூல ஓலையின் வாசகம் இது: ‘அருமறை நாவல் ஆகி சைவன்ஆ ரூரன் செய்கை பேகுமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தலுக்கு யானும் என்பால் வருமுறை மரபுளோரும் அழித்தோண்டு செய்தற் கோலை இருமையால் எழுதி நேர்ந்தேன் - இதற்கிவை என்ன முத்து". இதனை அவையோர் பணித்த வண்ணம் கரணத்தான் குரல் விட்டுப் படித்துக் காட்டுகின்றான். அவையோர் ஒலையில் சான்றாளர்களாக கையெழுத் திட்டவர்களின் கையெழுத்துகளையும் ஒப்பு நோக்கி இவை ஏத்துக் கொள்ளத் தக்கனவாகும் என்று கூறி ஒத்துக் கொள் கின்றனர். அங்ஙனமே, நம்பியாரூரரின் பாட்டனார் கையெழுத்தாகச் சேமிக்கப்பெற்று கைச்சாத்தொன்றைக் கோணரச் செய்து ஒப்பு நோக்கி, கையெழுத்துகள் இரண்டி தும் ஒத்திருப்பதை ஒப்புக் கொள்ளுகின்றனர். அவைப் பேரியோர்கள். இவர்கள் நம்பியாரூரரின் தோல்வியை அறிவிக்கின்றனர். நம்பியாரூரர் அனவயின் முடிவை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி தோன்றாது தவிக்கின்றார். 6. பெ. பு: தடுத்தாட் கொண்ட-59