பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . தம்பிரான் தோழர் இந்தத் திருவாக்கினைச் செவிமடுத்த நம்பியாரூரர் தாய்ப் பசுவின் கனைப்பினைக் கேட்டுக் கதறும் கன்றினைப் போலாகின்றார். மெய்ம்மயிர் சிவிர்க்கத் தம் இரு கைகளை யும் தலைமேல் கூப்பி, மறையவனாக வந்து வலிய ஆட் கொண்ட இச்செயல் தில்லையம்பலக் கூத்தனாகிய நுமது திருவருட் செயலோ?’ என்று நெஞ்சம் நெக்குருகப் போற்றித் தொழுகின்றார். இந்நிலையில் அம்மையப்பர் அவரை நோக்கி நம்முடன் நீ வன்மொழிகளைப் பேசினமையால் வன்றொண்டின் என்ற பெயரைப் பெறுகின்றாய்; நீ அன்பி னால் நமக்குத் தரத்தக்கது சுவை நிறைந்த திருப்பாட்டே யாகும்; அதுவே வழிபாட்டிற்குரிய சிறந்த மந்திரமும் ஆகும். ஆதலால் இவ்வுலகில் செந்தமிழ்த் திருப்பாடல் களால் நம்மைப் பாடிப் போற்றுவாயாக’’ என்று பணித் தருளுகின்றார். - . அம்மையப்பரின் அருளுரையைக் கேட்ட வன்றொண்டர் வேதியன் ஆகி வந்து அடியேனை ஆட்கொண்ட கோதிலா அமுதே, அடிநாயேன் நின் திருவருட் பண்பாகிய பெருங் கடலுள் எதனையறிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்? என்று இறைவனை நோக்கிப் பணிவன்புடன் உளங் கசிந்து வினவி நிற்கின்றார். ஆருரை நோக்கி அங்கணர், "அன்பனே, யான் ஒலை காட்டி நின்னை ஆ. கொண்டபொழுது நீ என்னைப்பித்தன் என்று மொழிந்தா பல்லவா? ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடு வாயாக" என்று அருளிச் செய்கின்றார். இறைவனின் பெருங்கருணைத் திறத்தை நினைந்துருகிய ஆரூரர், பித்தாபிறை குடிபெரு மானே அருளாளா எத்தான்மறவாதேநினைக் - கின்றேன்மனத் துைைன