பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தல வழிபாடு 2} மலையார் அரு வித் திரள் மா மணியுந்திக் குலையாரக் கொணர்ந் தெற்றியோர் - - - பெண்னைவடபால் கலையார் அல்குல் கன்னியராடுந் துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. என்பது முதல் பாடல். இப்பதிகத்தின் பாடல்தோறும், தலைவாவுணை வேண்டிக் கொள்வேன் தவநெறியே. என்று தவநெறியைத் தமக்கு அருளுமாறு வேண்டுகின்றார். பாடல்தோறும் ஒரு முறைக்குப் பத்துமுறை வேண்டுவது கண்டு மகிழத்தக்கது. மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அடக்கித் தவநெறியில் செல்லும் பேராற்றல் இறைவனது திருவருள்வழி ஒழுகும் மெய்யடியார்க்கன்றி ஏனையோர்க்கு எய்தலரிது என்பதை உணர்ந்த நாவலூர் வேந்தர் திருத் துறையூர் இறைவனை நோக்கித் தமக்குத் தவநெறி தந்து அருளுமாறு போற்றினமையை இப்பதிகப் பாடல்களால் அறிய முடிகின்றது. இறைவனின் திருவடி தீட்சை : திருத்துறையூக் இறை வணிடம் விடை பெற்றுக்கொண்டு சிவபெருமான் கோயில் கொண்டுள்ள பல திருத்தலங்களை வழிபடுகின்றார் சேக்கிழார் பெருமான். "சிவபெருமான் அமர்த்தருளும் பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி' என்று குறிப்பிடுகின்றாரே யன்றி தலங்களின் பெயர்களைச் சுட்ட வில்லை. இப்பயணத்தை அடுத்து பெரும்பற்றப் புலியூர் என்னும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஆனந்தத் திருநடனம் புரியும் கூத்தப்பெருமானை வழிபட விழை கின்றார். உடனே புறப்படுகின்றார். பெண்ணையைக் கடந்து 4 பெபு தடுத்தாட் கொண்ட8