பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? தம்பிரான் தோழர் ஞாயிறு மறையும் மாலைப்பொழுதில் திருவதிகையின்" எல்லைப் பகுதியை அடைகின்றார். அப்பர் அடிகட்குச் சூலை நோய்நீக்கி "நாவுக்காசு' என்ற பட்டம் அளித்தவர் அதிகை விரட்டானத்திறைவரே. நாவுக்கரசர் உழவாரப் படையைக் கையிலேந்திச் சிவ பெருமானுக்குத் தொண்டுபுரிந்த திருவதிகையைத் தம் கான் களால் மிதித்து உட்புக விரும்பாத நம்பியாரூர், அப்பதியின் புறத்தேயமைந்த சித்தவடமடத்தில்" அடியார்களுடன் தங்குகின்றார். இங்கிருந்தபடியே திருவீரட்டானத்து இறை வனுடைய திருவடிகளைச் சிந்தித்த வண்ணம் திருமடத்தில் துயில்கொள்ளுகின்றார் நம்பியாரூரர். அதிகை வீரட் டானத்து இறைவர் தளர்ந்த முதுவேதியர் வடிவுகொண்டு அப்பொது மடத்தில் புகுகின்றார்; வன்றொண்டர் அருகில் படுத்து உறங்கும் பாவனையில் அவர் திருமுடிமீது தம் திருவடிகள் பொருந்துமாறு படுக்கின்றார். விழித்துணர்ந்த வன்றொண்டர், மறையவரை நோக்கி "பெரியோய், தும் திருவடியை என் சென்னியின்மீது வைத்தனையே’ என்று கூற, முதியவரும் இவ்வாறு திசையறியா வகை செய்தது என் தளர்ந்த முதுமை நிலையே” என்று மறுமொழி தருகின்றார். வன்றொண்டர் வேறொரு பக்கம் தலைவைத்துத் துயில் கொள்ளத் தொடங்க, அங்கும் தம் திருவடியை நீட்டு 5. அதிகை - விாட்டானம் - விழுப்புரம் - கடலூர் இருப்பூர்தி வழியில் உள்ள பண்ணுருட்டி நிலையத்தி விருந்தது 2 இல் தொலைவிலுள்ளது. சிவத்தலங் களுள் அதிகப்பட்டது (மேம்பட்டது) அதிகா, அதிகை, அப்பர் அடிகட்குச் சூலைநோய் நீங்கிய தலம். அப்பரும் அவர்தமிக்கையார் திலகவதியாரும் சரியைத் தொண்டு செய்ததலம். இத்தலத்தருகில் கெடிலததி ஓடுகின்றது. . . . . - 6. இந்தமடம் திருக்கோயிலின் தெற்கு விதியிலுள்ளது. இஃது ஒர் வைப்புத்தலம்,