பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தல வழிபாடு 23 கின்றார் முது மறையவர். இதனை உணர்ந்த நம்பியாரூரர், "இங்ஙனம் பல கால் என்னை மிதிக்கும் நீர் யார்?' என்று வினவ, மறையவரும் நீ என்னை அறிந்திலையோ? என்று சொல்லியவண்ணம் மறைகின்றார். இந்திலையில் தம் சென்னியின் மீது திருவடிகுட்டி மறைந்த மறையவர் திருவதிகை வீரட்டானப் பெருமானே எனத் தெளிகின்றார், நம்பியாரூரர். உடனே 'தம்மனையறி யாத (7 38) என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் திருவீரட்டானத்து இறைவனைப் போற்றுகின்றார். இப்பதிக முதல் திருப்பாடலின், ஆ தெம்மான்றன் அடிகொண்டென் முடிமேல்வைத் - திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன். - எம்மானை யெறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோதும் இகழ்வன்போலியானே என்ற பகுதியில் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பெற்றிருத்தலைக் கண்டு மகிழலாம். திருவடி தீட்சைத்திருவிளையாடல் நிகழ்ந்த நிலையில் இப்பதிகம் தோன்றியது என்ற வரலாறு தெரிகின்றது. - திருவதிகை இறைவனால் திருவடிதீட்சை பெற்ற தம் பிரான் தோழர் இறைவன் திருவடிகளை நினைந்து பெரு மகிழ்ச்சியுடையவராய் கெடிலநதியில் தீர்த்தமாடிச் சிவபெருமானை வழி அந்நதியின் தென்கரையை அடைகின்றார். திரும ழி (பதிகம் இல்லை) திருத் 7. மாணிக்குழி-கடஇ{புதிய நகரம்). இங்கிருந்து 3: கல்தொலைவிலு து. செல்லும் வழியில் திருவ ஹீத்திரபுரம் எ வைணவத்தலம் உள்ளது. திருமால் வாமனாவதாரத்தில் (=மாணி) பூசித் ததை 'தெடுமால் குறளனாகி மிகவும் சித்தம் தொருக்கி வழிபாடு செய்கின்ற சிவலோகன் இடமாம்” என்ற சம்பந்தர் தேவார அடிகளால் (3.7:4) அறியலாம்,