பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தம்பிரான் தோழர் தினை நகர் ஆகிய தலங்களை வழிபடுகின்றார். திருத்தினை நகர் பெருமான்மீது நீ றதாங்கிய திருதுதலானை' (7.64) என்ற முதற்குறிப்பினையுடைய செந்தமிழ்த் திருப்பதிகம் பாடுகின்றார் (இது முதல் முறை வருகை). இதன் முதற் பாடல், - - நீறு தாங்கிய திருதுத லானை - - நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையி னானை . குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆது தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளும் சேறு தாங்கிய திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினை சென்றடை மனனே. {1} என்பது. - - - - - இாண்டாம் நிலை கொங்குநாட்டுத் திருத்தலமாகிய வெஞ்சமாக்கூடலை வழிபட்ட பிறகு நம்பியாரூரர் சோழ தாட்டில் சில தலங்களை வழிபடுகின்றார். அதன் பிறகு நடு தாட்டை அடைகின்றார். திருக்கூடலையாற்றுாரை அணுகி உவர் அங்குச் செல்லாமல் முதுகுன்றை நோக்கிச் செல்கின் றார். அப்பொழுது கூடலையா ற்றுசில்' கோயில் கொண்ட 8. தினை நகர் தீர்த்தனகிரி). சென்னை எழும்பூர் . விழுப்புரம் - மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் உள்ள ஆலப்பாக்கம் நிலையத்திலிருந்து 5; கல் தொலைவிலுள்ளது. - * - - 9. பெ. பு: ஏயர்கோன் - 101 10. கூடலையாற்றுச் விருத்தாசலத்திலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது. விருத்தாசலத்திவிருந்து (அல்லது சிதம்பரத்திலிருந்து) புவனகிரி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று வழியில் வளையமாதேவி. யில் இறங்கிச் செல்லவேண்டும். வெள்ளாறும் மணி முத்தாறும் கூடும் இடமே கூடலையாற்றுார். நம்பி