பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தல வழிபாடு .25 ருளிய சிவபெருமான் மறையவர் வடிவுகொண்டு ஒருவழிப் போக்கர்போல் வன்றொண்டரை அணுகி நிற்கின்றார். வேதியரைக்கண்ட நம்பியாரூரர் அவரைப் பணிந்து, "ஐயன் மீர், யாம் இன்று திருமுதுகுன்றத்துக்குப் போதற்குரிய வழி யினைத் தெரிவித்தருள வேண்டும்’ என்று வேண்டுகின்றார். அதனைக் கேட்ட வேதியர் (இறைவன்) "கூடலையாற்றுரரை அடையச் செல்வது இவ்வழிதான்' எனக்கூறி அவருக்குத் துணையாய்த் தாமும் அவ்வூர்எலைவரை உடன் சென்று பின் மறைந்தருளுகின்றார். உடன் வந்த வேதியரைக் காணாத தம்பிரான் தோழர் தம்மை இட்டு வந்து மறைந்த மறையவர் சிவபெருமானே எனத் தெளிகின்றார் வடிவுடை மழுவேத்தி (1.85) என்ற திருப்பதிகம் பாடுகின்றார், வடிவுடை மமுவேந்தி மதகரி புரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை வாற்றுாரில் அடிகளில் வழிபோந்த " அதிசய மறியேன்ே. (1) என்பது இதன் முதற்பாடல். பின்னர் சுடலையாற்றுார். கோயிலையடைந்து தமக்கு வழித்துணையாக வந்து மறைந்த் பெருமானைப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், யாரூரருக்கு இவ்வழியாகத்தான் செல்லவேண்டும் என்று சொல்லிய இறைவன் மறைந்து இத்தலப் பதிகம் பெற்றதைப் பாடல்தோறும் கண்டு மகிழலாம். . - . -