பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தம்பிரான் தோழர் ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள் னேறின் ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி தடமென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்துார் ஐயன் அருளதே (4) - என்ற இப்பதிக நான்காம் பாடலால் சிவபெருமான் அருளால் சங்கலியைப் அடைந்த வரலாற்றைக் குறிப்பிடுகின்றார். இத்திருக்கோயிலிலுள்ள கல்வெட்டு' ஒன்றால் இத் திருக்கோயிலில் பதினாறு குருடர்கள் திருப்பதிகம் விண்ணப் பிக்கவும் (தேவாரம் ஒதவும்) அவர்கட்குக் கண்காட்டுவார் இருவர் (விழிப்பார்வையுடைய வேறு இருவர்) வழித்துணை யாக அவர்களைக் கையில் பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப்பெற்றிருந்ததை அறிகின்றோம். 700 ஆண்டுகட்கு முன்னரே, திருக்கோயில்களில் குருடர்கள் இவ்வாறு ஆதரிக்கப்பெற்றமை இன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். தேடுவன் தேடுவன் செம்மலர்ப் - பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுதுன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுலன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத் துார்எம் அடிகட்கே (9). 14. தெ இ. க. 8.749