பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தம்பிரான் தோழர் பரவையாருக்குத் தெரிவித்துச் சிவச்சிந்தனையோடு இருக் இது அன்றிரவே பூதகணங்கள் குண்டைகளிலிருந்து தெற்குவியலைப் பரவையார் இல்லத்திலும் திருவாரூர்த் தெருக்களிலும் நிரப்பிவிடுகின்றன. மறுநாள் துயில் உணர்ந் தெழுந்த பரவையார் தெற்குவியலைக் கண்டு வியப்புறுகின் றார். ஆரூர் மக்கள் அவரவர் மனை எல்லைக்குட்பட்டுக் கிடக்கும் நெல்குவியலை அனுரவர்களே வாரிக் கொள்ளலாம் என்று வென்றி முரசறைவிக்கின்றார். பரவையார்." கோட்புலி நாயனார்": இவர் நாட்டியத்தான் குடி என்னும் ஊரைச் சார்ந்தவர்; சோழ மன்னரின் தானைத் தலைவர், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில்கட்கு அமுது படிக்குத் தேவையான செந்நெல்லைச் சேர்த்தளிக்கும் திருத் தொண்டினை இடையறாது மேற்கொண்டதாளாண்மை மிக்கவேளாளக் குடிமகன். இவர் நம்பியாரூரைத் தம் பதிக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றார். தம்பிரான் தோழரும் அவரது அன்பு அழைப்பை ஏற்று நாட்டியத்தான் குடிக்கு ஏகுகின்றார். கோட்புலியார் அவரை எதிர்கொண்டு வரவேற்றுத் தமது திருமாளிகைக்கு அழைத்துச் சென்று முறைப்படி பூசனை முதலியவை புரிந்து திருவமுது செய்விக் கின்றார். தம் மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்னும் பெண்களை வன்றொண்டர் திருவடிகளில் வனங்கச் செய் கின்றார்; தாமும் வணங்கி நிற்கின்றார். 'பெருமானே, இப் பெண் பிள்ளைகள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள, தம்பிரான் தோழரும் அவரது அன்பின் திறத்திற்கு மெச்சி, "இப்பெண் பிள்ளைகள் இருவரும் என் அருமை மக்கள்’ என்று கூறி அவர்களை, அன்பினால் எடுத்தனைத்துத் தம் மடிமீது அமர்த்திக் 7. பெ. ч ஏயர்கோன் -28 8. இவர் அறுபத்து மூவரில் ஒருவர்