14 ☐ தம்ம பதம்
8. இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை; பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே பண்டை அறநெறி. (5)
6. ‘தமக்கும் இங்கே முடிவுண்டு' என்பதைச் சிலர் அறிவதில்லை! ஆனால் அறிந்தவர்களுடைய பிணக்குகள் உடனே தீர்ந்துவிடும். (6)
7. புலன்களை அடக்காமல், உணவில் நிதானமில்லாமல், மடிமையில் ஆழ்ந்து , 'வீரியம் குறைந்து, இன்பங்களுக்காவே வாழ்ந்து வருவோனை, வலியற்ற மரத்தைக் காற்று வீழ்த்துவது போல, மாரன்[1] முறியடிக்கிறான். (7)
8. புலனடக்கத்தோடு, நிதான உணர்வுடனும், நல்லறத்திலே நாட்டத்துடனும், நிறைந்த வீரியத்துடனும் இன்பங்களை எதிர்பாராமல் வாழ்ந்து வருவோனை, பாறைகள் நிறைந்த மலையைச் சூறாவளி அசைக்க முடியாததுபோல மாரன் வெல்ல முடியாது. (8)
9. மனமாசுகள் நீங்காமல், எவன் அடக்கமும் உண்மையும் இல்லாதவனோ, அவன் சீவர உடைக்கு [2] அருகனல்லன். (9)
10. மனமாசுகள் நீங்கி, எவன் சகல சீலங்களிலும் நிலைத்து நின்று, அடக்கமும் உண்மையும் உள்ளவனோ, அவனே சீவர உடைக்கு உரியவன். (10)
11. பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு, மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்