உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் இருபத்து மூன்று

யானை


(சூத்திரங்கள் பலவற்றில் யானையை உபமானமாகக் கூறியிருத்தல் பற்றி இயலுக்கே ‘யானை' என்று பெயர் வந்துள்ளது.)

318. யுத்தத்தில் யானை வில்லிலிருந்து தெறித்து வரும் அம்புகளைத் தாங்குவதுபோல, நான் பிறர் உரைக்கும் நிந்தை மொழிகளைத் தாங்கிக் கொள்வேன்; ஏனெனில் பெரும்பாலான ஜனங்கள் பண்பற்றவர்களாகவே இருக்கின்றனர். (1)

319. பழகிய யானையையே போருக்கு அழைத்துச் செல்வர்; பழகிய யானை மீதே அரசர் அமர்ந்து செல்வர். மக்களிலும் நல்வழியில் பழகியவனே, நிந்தை மொழிகளைப் பொறுத்துக் கொள்வோனே சிறந்தவன். (2)

320. கோவேறு கழுதைகளும், சிந்து நாட்டு உயர்ந்த சாதிக் குதிரைகளும், பெரிய போர் யானைகளும் பழக்கிய பின்னால் சிறந்தவைகளாம். ஆனால் தன்னைத் தானே அடக்கியாள்பவன் இவை அனைத்திலும் சிறந்தவன். (3)

321. ஏனெனில், இந்தப் பிராணிகள் உதவியால் எந்த மனிதனும் எவரும் சென்றறியாத நிருவாண நாட்டுக்குச் செல்ல முடியாது; மனப்பயிற்சியுள்ள மனிதன் புலனடக்கமுள்ள தன் இயல்பையே வாகனமாய்க் கொண்டு அந்த நாட்டை அடைகிறான். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/77&oldid=1381881" இலிருந்து மீள்விக்கப்பட்டது