அவா ☐ 83
352. ‘சகல தானங்களையும் தரும தானமே [1] வெல்கிறது; சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும அநுபவம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது. (21)
353. போக வாழ்க்கை மூடனை அழித்துவிடுகின்றது; ஆனால் எதிர்க்கரையை நாடுவோரை அழிப்பதில்லை. மூடன் போக ஆசையால் பிறரால் அழிக் கப்படுவதுபோல் [2] தானே தன்னை அழித்துக் கொள்கிறான். (22)
354. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (23)
355. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத் திற்குத் தீமை துவேஷம்; ஆதலால் துவேஷ மற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (24)
356. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை மயக்கம்; ஆதலால் மயக்கம் நீங்கியவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (25)
357. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை இச்சை; ஆதலால் இச்சையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (26)