உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிக்கு ☐ 85

364. பிக்கு ஒருவன், தனக்குக் கிடைத்தது அற்பமேயாயினும், அதை இகழாமல், துயவாழ்வுடன் சோம்பலின்றி உழைத்து வந்தால், அவனைத் தேவர்களும் புகழ்கின்றனர். (7)

365.எவ்விதமான நாமருபத்தையும், ஒருபோதும் தனது என்று கருதாமல், ஒன்றும் இல்லாத நிலைக்கு வருந்தாமல் இருப்பவனே பிக்கு எனப்படுவான். (8)

366. [எல்லோருடனும்] அன்புடன் பழகி, புத்தருடைய தருமத்தில் இன்புற்று வாழும் பிக்கு, வாழ்வின் துயரம் நீங்கி, சாந்தி நிலையமான நிருவாண இன்பத்தை அடைவான். (9)

367.ஒ பிக்கு இந்த ஒடத்தைக் காலியாக்கு; பாரம் குறைந்தால் இது இலகுவாக ஒடும். விருப்பையும் வெறுப்பையும் சேதித்துவிட்டால், நீ விடுதலைப் பேற்றை அடைவாய். (10)

368. ஐந்தை வெட்டித் தள்ளவும்: ஐந்தைக் கைவிடவும்: ஐந்தில் தேர்ந்து மேலே உயரவும் ஐந்து தளைகளிலிருந்தும் தப்பிய பிக்கு ‘ஒகதிண்ணா’ - ‘வெள்ளத்தைக் கடந்தவன்’ -என்றும் சொல்லப்படுகிறான். [1] (11)

369. ஒ பிக்கு! தியானம் செய்வாயாக, அசிரத்தையாக இருக்கவேண்டாம். உனது சிந்தனை பலன்களின் இன்பங்களில் திளைத்திருக்க வேண்டாம். அசிரத்தையினால், பழுக்கக் காய்ந்த இரும்பு உருண்டைகளை விழுங்க நேராமலும், அவை சுடும்போது ‘இது துக்கம்!’ என்று கதறாமலும் இருக்க வழிசெய்து கொள்ளவும். (12)


  1. இதன் விளக்கம் அனுபந்தம் மூன்றில் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/87&oldid=1359958" இலிருந்து மீள்விக்கப்பட்டது