பிராமணன் ☐ 93
410. எவன் இவ்வுலகில் புண்ணிய பாவங்களைப் பற்றிய தொடர்புகளுக்கு அதீதமாய்ச் சென்றவனோ, எவன் சோகமின்றி, உணர்ச்சி வெறிகளைக் கை விட்டுத் தூய நிலையிலுள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (30)
411. எவன் சந்தரனைப் போல் களங்கமற்றும், பரிசுத்தமாயும், தெளிவாயும், கலக்கமில்லாமலும், விளங்குகிறானோ, எவனிடம் உல்லாசம் அறவே அழிந்து விட்டதோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன் . (31)
412. பிறப்பு இறப்புக்களும், மயக்கமும் உள்ள கடத்தற்கு அரிய இந்தச் சேற்றுப் பாதையைத் தாண்டி மறு கரையை அடைந்தவன், தியானமுள்ளவன் , கலக்கமற்றவன் , ஐயமற்றவன் , எதையும் பற்றாதவன் , சாந்தி பெற்றவன் எவனோ, அவனையே, நான் பிராமணன் என்று சொல்வேன். (32)
413. இவ்வுலகில் புலன் இன்பங்களைத் துறந்து, தங்குவதற்கு ஒரு வீடில்லாமல் திரிகின்றவன், (உடலோடு) வாழும் வாழ்வின் ஆசை அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (33)
414. இவ்வுலகில் அவா அனைத்தையும் அவித்துத் (தங்குவதற்கு) ஒரு வீடில்லாமல் திரிகின்றவன் , (உடலோடு) வாழும் வாழ்வின் ஆசைகள் அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (34)
415.மானிடரின் போகங்களையும், தெய்விகமான போகங்களையும் உதறிவிட்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விலகியவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (35)