பக்கம்:தம்ம பதம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|) |

| |(}.

(-) தம்ம பதம்

| 17.

| 18.

4 19.

42().

| 2 |.

இன் பமான வற்றையும் துன்பமான வற்றையும் கைவிட்டு அமைதி பெற்றவன், (மறு பிறப்புக்குக் காரணமான கர்ம) வித்துக்களை ஒதுக்கியவன் , சகல உலகங்களையும் வென்ற வீரன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன் . (36) எங்கும் உயிர்கள் அழிவதையும், அவைகளின் தோற்றத்தையும் அறிந்தவன், பற்றற்றவன், நல் வழி நடப்பவன், போதியடைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன். (37) எவனுடைய பாதையைத் தேவர்களும் கந்தர்வர் களும், மானிடர்களும் அறியார்களோ, எ வன் குறைகள் நீங்கி அருகத் நிலையை அடைந்து விட்டானோ, அவனையே நான் பிராமண ன் என்று சொல்வேன். (38) எவனுக்கு முன்னாலும் பின்னாலும் இடையிலும் எதுவும் இல்லையோ எப்பொருளுமின் றி எவ் விதப் பற்று மின் றியிருக்கிறானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (39) காளை போல் வீர முள்ள வன், பெருந்தன்மை யுள்ளவன், தீரன் ஞர்ண் முனிவன், (மரணத்தை) வென்றவன், பாவமற்றவன், கல்வியில் பூர்த்தி பெற்றவன், போதியடைந்தவன் எவனோ, அவ ைன் யே நான் பிராமணன் என்று சொல்வேன்.

(40) தன்னுடைய முந்திய ஜன்மங்களை அறிந்தவன், வர்க்கத்தையும் நரக்த்தையும் அறிந்தவன், பிற விகள்ளின் எல்ல்ையை அடைந்தவன், அறிவு நிறைந்த முனிவன், நிறைவேற்ற வேண்டியவை அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவன் எவனோ, அவ்னையே நான் பிராமணன் என்று சொல்வேன் . (41)

தம்ம பதம் முற்றிற்று போதி-பூர்ண ஞானம்.

SS SSTTTSSTTTTTS S STS STS STS SS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/96&oldid=568710" இருந்து மீள்விக்கப்பட்டது