பக்கம்:தயா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி - 9% "தாங்க்யூ மாஸ்டரி, தாங்க்யூ.”

  • எஸ். ஸார்,'

"நோ ஸ்ார்.” 'ரெடி ஸ்ார்.’ "ஒ எஸ். ஸார்.” வழிதானா இல்லே, வாயிலே இருக்கு வழி. தினம் பிழைப்பு நடந்துட்டுத்தானே இருக்குது! அப்படியும் தலையைத் தடவ ஆள் கிடைக்காட்டி, ஒரு மிட்டாய்ச் கடையிலோ, ரொட்டிக் கடையிலோ ஆள் ஏமாந்த சமயம் பார்த்து ஒரு பன்னோ, லட்டோ லவுட்டினாலும் போச்சு! ஆனால், எடுக்கத்தெரியாமல் எடுத்தால் மாட் டிக்க வேண்டியதுதான். சாமர்த்தியம் இல்லாட்டா தண்டனை சரிதானே! இல்லாட்டி போர் போரா கொட்டி வெச்ச பண்டத்திலே ஒண்ணு எடுத்து, கடைக் காரன் குடி பாழா போச்சுன்னா, அஞ்சுருபா அவதாரம் அல்லது முப்பது நாள் காவல்? ஆனால், இத்தனை யோச ணைக்கும் அவசரம் வல்லே. இன்னும் பொழுதிருக்கும் அட சீ இதென்ன மூக்கிலே குறு குறு! கண்ணைத் திறவாமலே முகத்துக்கெதிரே கையை வீசினான். ஆனாலும் மூக்கைப் பிடிவாதமாய்க் குடைந்தது. அட, சூ-! அரை மயக்கம், முழு நினைவும் கூடவில்லை. மன மில்லாத அரைக் கண் திறப்பில் பார்வையில் முதலில் படர்ந்தது அவனையும் தன்னுள் முழுக்கும் ஒரு பால் வெளிறு, பிறகு அதை விளிம்பு கட்டிய செந்தளிர். இரண்டும் சேர்ந்து சிரிப்பில் பல்வரிசையென உணர்வில் முன் தோய்ந்த பின்தான், அதன் பின்புலமாகி அதன் முகம் மனமயக்கத்தின் படலத்தில் பிதுங்கிற்று. இலை த-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/103&oldid=886215" இலிருந்து மீள்விக்கப்பட்டது