பக்கம்:தயா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}4. தயா இது பொன்னு தான். நீயும் நானும்தான் கில்ட்." -

பின்னே என்ன நீ உரைக்கற உரை, மோதிரம் தேறுமா? உரை கல்லையே அடமானம் வெக்கலாமா?”

"நாங்க உசிர்போனாலும் உரை கல்லை விட மாட் டோம் தம்பி. இதிலே பொன்னைத்தானா உரைக்கறோம், ஆளையே உரைக்கறோம், இதெப்படி உன் கைக்கு வந்தது? மயங்காதே. சும்மாச் சொல்லு!” 'இது என் பெண்சாதியினுடையது. அப்படிச் சொல் கையிலேயே இடது கன்னத்தில் நரம்பு விலுக்விலுக்கென்று உதைத்துக் கொண்டது. அந்த இடத்தை அழுத்தித் தடவிக் கொண்டான், . மூக்குத் தண்டுவரை லேட்டின் முக்குக் கண்ணாடி சரிந் தது. இந்த ஜாதிக்கே எவ்வளவு பெரிய முழி பார்த்தையா? அவங்களே விக்கறாங்களே தொன்னையிலே ஜீராவுலே மிதக்குதே ரஸ்குல்லா, அதுமாதிரி! "அப்படியா? எப்போ ஆச்சு கலியாணம்? எனக்குத் தெரியாமலா?” "ஏன் உன் பெண்ணைக் கொடுக்கலாம்னு இருந் தையா?” - லேட்டுக்குக் கோபம் வரவில்லை. மோதிரத்தைக் ட்டை விரலுக்கும் நடு விரலுக்குமிடையே நாளருக்காய்ப் டித்துத் திருப்பிக் கொண்டிருந்தான். ஒற்றைச் சுருளில், லையும் வாலும் முடிச்சிட்டுக் கொண்ட பாம்பின் கண்ணில் பதித்த பச்சைக் கல்லில், தணலில் தெரியும் அளவின் நீரோட் டம்போல், ஒளி மங்கி நெளிந்தது. - அவனுக்கு சீற்றம் மேலும் பொங்கியெழுந்தது. 'இல்லை. மோதிரத்தோடு தாலியையும் ஏன் கொண்டு வந்து வெக்கல்லேன்னு கேக்கறையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/110&oldid=886223" இலிருந்து மீள்விக்கப்பட்டது