பக்கம்:தயா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜில்லி 117 பூவோடு மாத்திரம் விட்டுட்டுப் போயிட்டா. அவளிட்ட பிச்சை என் மவன். எங்கே இருந்தானாச்சும் ஆயுசோடு அவன் நல்லாயிருக்கனும்: எனக்கு உதவாட்டியும் போறான். நான் எப்படியோ அய்யாமாரு வீட்டுக் காப்பித்தண்ணி குடிச்சி-சஞ்சித்தண்ணி போட்டா கஞ்சித்தண்ணி, அமா வாசை, பண்டிகை சோறு போட்டால் சோறு-இப்பிடியே என் வவுத்தை வளத்துட்டு எண்ணிக்கேனும் ஒருநாள் இந்தப் புளக்கடையிலேயே தலைப்பை விரிச்சுப் போட்டவ திரும்பி எழுந்திராமே போனாலும் போறேன். எம் புள்ளை எனக்கு ஒதவ மாட்டான்; எனக்கே தெரியுது. அப்பன் சரியா இருந் தாத்தானே அவனும் சரியா இருப்பான்? அப்பனில்லாப் புள்ளை. நான் என் வவுத்துக் கய்ட்டத்துலே என் பொம்புளே சன்மத்திலே என்னாத்தை அவனைக் கட்டி ஆள முடியுது? ஜாண் புள்ளையானாலும் ஆண்புள்ளையில்லே? இப்பவே துண்டு பீடி பிடிக்கிறான். எனக்கே தெரியுது. என்னையே வண்டையாத் திட்றான். எனக்குக் காது அவிஞ்சா போச்சு? ஒருசமயம் இல்லாட்டி ஒருசமயம் கோவம் பொருக்கு தில்லே; அடப்பாவி, ஏற்கனவே ஒரு கண் அவிஞ்சு போச் சே?ன்னு கையை ஓங்கறேன். ஆனால் கை இறங்குதப்போ தானா வேகம் கொறைஞ்சு போவுதே. அது என்ன ஆச்சரியம் அம்மா? அதுவும் அந்த மாரியாத்தா வரம்தானா, பையன் மேலே கை படப்போ பஞ்சாத்தான் ஒத்திப் போவது, ஆனா அதுக்கே அந்த சமயம் மவன் மனம் எந்த கொணத் துலே இருக்குமோ, எனக்குத் தெரியறதில்லே? அவனே வாய்விட்டு சிரிச்சாலும் போச்சு, இல்லாட்டி, "ஐயோ அப்பாடி அம்மாடி! கொல்றாளே, கொல்றாளே!”ன்னு தெருவைக் கூட்டி னாலும் போச்சு. ‘ஏண்டி அறிவு கெட்ட வளே! அம்பனில்லாக் கொயந்தை-ஒனக்கு ஒரு தலைக்கு ஒரு மலன்-அவனை அடிச்சு ஒனக்கு என்ன லாபம்?னு மத்தியஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/123&oldid=886238" இலிருந்து மீள்விக்கப்பட்டது