பக்கம்:தயா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 3 தியா தம் பன்றவங்க ஒரு வார்த்தை சொன்னா எனக்குத் துக்கம் நெஞ்சைப் பிடுங்கிக்குது, அம்மா ஒங்கிட்ட மாத்ரம் விட்டுச் சொல்றேனே; ஒங்கிட்டச் சொன்னா என் ரகசியம் எங்கும் போவாது; எனக்குத் தெரியும். எனக்குக் கடம்பாடி கிட்ட கதிகலக்கம்தான். இந்தக் காலத்துப் பசங்களைத் தைரியமா ஒரு வார்த்தை பேச முடியுதா? தொட்டதுக்கெல்லாம் ஆட்டைவுட்டு ஒடிப்போவுதுங்க. ரயிலடியிலே தலையைக் குடுக்குதுங்க, ஒருநாள் கண்ணப்பன் புள்ளையார் கொளத் திலே மிதக்குதுங்க. அதுங்கதான் ரோசக்காரப்புள்ளைங்களா. இல்லே, பண்டமெல்லாம் வெலையேறிப் போச்சுன்னு உயிர் மாத்திரம் அப்படி மலிஞ்சு போச்சா?-இங்கிலீசு படிச்சவங்க, ஒங்களைத்தான் கேக்கணும். "ஆனா என் மவன் மேலே யாராச்சும் கைவெச்சாங் கன்னு தெரிஞ்சுது, எனக்குத் தாங்காது; சும் மா வுட மாட் டேன். காளி கோவம் என் ம்ேலே சாமி வந்துடும். முந்தா நேத்து இசுகூலுக்குப் போயி அவனோடே வாத்தியாரம்மா கிட்ட நானே சொல்லிவிட்டேன்:"இதோ பாரு, என் மவன் மூணாம் கிளாசை மூணு வருசமாத் தாண்டாட்டியும் எனக்கு அக்கறையில்லே. அவன் அப்பாஉசிரோடே இருந்தா எப்பவோ தாண்டியிருப்பான், அவன் அப்பன், அரிவாள் மீசை ஆறு முகக் கிராமணி, ஒரு பேச்சு பேசக்கூட வேணாம்-முளங் காலுக்கு மேலே கெட்டி செவப்புச் சாய வேட்டி, பானை வவுத்துலே பாதி சரிய, புள்ளையை ஒரு கையிலே புடிச்சுக் கிட்டு வந்து நின்னு மாங்கொட்டை முளியை ஒரு தரம் முளிச்சாப் போதும், பெரிய வாத்தியாரே நேரே வந்து புள்ளையைக் கூட்டிக் கிட்டுத் தன் கிளாசுலேயே குந்த வெச்சுடுவாரு. அதனாலே என் புள்ளைக்குப் படிப்பு ஏறாட்டிப் போவுது, அவனுக்கு ஏறாது. அவனுக்கு ஏற வேணாம். நீங்கதான் ஒசந்த சாதி. பொண்ணானாலும் படிப்பு வேனும்: வேலை வேணும். கலியாணம் ஆவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/124&oldid=886239" இலிருந்து மீள்விக்கப்பட்டது