பக்கம்:தயா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜில்லி ił9 லேன்னா, கலியாணத்துக்குத் துட்டு சேர்க்க, வேலைக்குப் போவீங்க. கலியாணம் ஆச்சுன்ளா செலவுக்குப் பத்த லேன்னு, பெத்த கொயந்தையைத் தொட்டிலில் வளர்த் துட்டு, வாயிலே சீப்பானைச் சொருவிட்டு, புருசனும் பொஞ்சாதியும் ரெண்டு பேரும் மூலைக் கொத்தரா உத்தியோவம் பார்ப்பீங்க, என் புள்ளே உங்க மாதிரி யெல்லாம் உத்தியோவம் பார்க்கப் போறானா? அந்த நாளிலே அவன் அப்பன் பாளையைச் சீவி கள்ளை இறக்கி ாைன்னா இந்த நாளிைே என் மவன் பனஞ்சாறை இறக் கிட்டுப் போறான். அவன் அப்பன் கத்தி இன்னும் ஏரவாணையில் சொருவித்தான் இருக்குது, அதன் கூர் இன்னும் மங்கல்லே. என் மவன் கண்ணாலம் கட்ட உங்க மாதிரியெல்லாம் ஒறவு தாண்டி, ஊர் தாண்டிப் போக வேணாம். எங்க குலம் போறதில்லே, என் மவனுக்குப் ப்ொண்ணு என் அண்ணி வவுத்துலே வளருது. இந்த ஆவுனிக்கு ம்ாசம் அஞ்சு, நான் அண்ணி வவுத்தைத் தொட்டுப் பார்த்துச் சொல்லிட்டேன். இது என் ஆட்டுப் படியிலே வலது காலை முன் எடுத்து வெச்சு வர என் மருமவ தான்’னு பொண்ணுதான் பிறக்கும்; எனக்குத் தெரியும். அது எங்க குலச் சத்தியம். என் அண்ணாத்தை என் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லுமா என்ன? ஆமான்னு தலையை ஆட்டினாலே அது ஆணையிட்ட சொல்லுதான். என் அண்ணிதான் எதிர் சொல்ல முடியுமா? என்னாச்சும் மொனகினாலே, வவுறும் புள்ளையுமா தெருவிலே நிறுத்திடு வான், நான் சொன்னாலும் கேட்கமாட்டான், "உன் பொண்ணுக்கு நீ தேடி வெச்ச புள்ளை பினாங்கிலேருந்து வருவான், நீயும் அவங்களோடு கப்பலேறிப் போய், அவுங்களுக்கு சமைச்சுப் போட்டுக்கிட்டு மூணு பேரும் குசாலாக் குடும்பம் நடத்துங்க'ன்னு சொல்லிடுவான். அதனாலே வாத்தியாரம்மா. ஒங்க சாதிக் கவலையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/125&oldid=886240" இலிருந்து மீள்விக்கப்பட்டது