பக்கம்:தயா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயா 7 'வாழைக்காய்க் கூட்டுமாதிரி-" நன்னாயிருக்கு அம்மாவும் பெண்ணும் மாத்தி மாத்தி எதிர்ஸ்வரம் போட்டு ஸ்ம்பந்தி மண்டையை உருட்டு உருட்டுன்னு உருட்டறது!” ஆமாண்டி லாபா, அவர் மண்டைகூட நன்னா, பெரிசா உருண்டையா இல்லே? குடுமியைப் பிச்ச நலங்குத் தேங்காய் மாதிரி?”

  • மண்டை பெரிசானால் மூளை ஜாஸ்தி.”

'கெட்டிக்காரர்." கலந்தேகமா? இல்லாட்டா இவ்வளவு பெரிய காரியத்தை இவ்வளவு சொல்பத்துலே அடக்கிவிட முடியுமா?" "அதுக்கென்ன பண்றது? அவாவாளுக்கு முடிஞ்சுது தானே?” "அழகாயிருக்கு நீ பரிஞ்சுக்கறது! நாம் மாத்திரம் கொல்லையிலே யானை கட்டி வாழறோமா? ஆனால், அதுக் காக சமயம் போது இல்லையா? எல்லாத்துக்கும் ஒரே பெப்பேயா? எனக்கும்தான் இல்லை. ஆனால், உன் கல்யாணத்தின் போது பந்தல் மாத்திரம்-’’ "ஐயோ போறுமேம்மா! சற்றே நிறுத்திக்கோயேன், கேட்டுக் கேட்டு எங்களுக்கே காது புளிச்சுப் போச்சு.” "அதுக்குச் சொல்ல வல்லே-' “என்ன சொல்லவல்லே? மீனாட்சியம்மன் கலியாணம் கூட. எங்கள் கலியாணத்துக்குப் பிந்திதான் போயேன்-' அவரவர் யோசனைகளின் படலங்கள் அவரவர்களை மூடியதில் பேச்சு சற்றே மறந்தது. இரிக் க்ரிக் கிர்க்-கிர்க்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/13&oldid=886245" இலிருந்து மீள்விக்கப்பட்டது