பக்கம்:தயா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி 143 எடுக்க வைக்கலாம். எடுத்து வந்தால் சொம்பு லாபம் ஆள் மூழ்கிப்போனால் அப்பவும் எனக்காக ஒருத்தன் செத்தான் என்கிற பெருமை. - - நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசறேள்? இன்னும் உங்களால் உங்களைப் பெற்றவர்கள் சுகப்பட வேண் எவ்வளவோ இருக்கு, உங்களுக்கு உத்தியோகம் வேண்டாமா? உங்களுக்கும் கலியானம் கார்த்திய நடக்கவேண்டாமா? காலம் எப்பவுமே இப். இருக்குமா?" 'என் வாழ்வின் கட்டிடமே இடிந்து விழுந்த பின் என் மேல் சவரனாகவே மழை பெய்தாலும் எனக்கு என்ன ஆச்சு?’ "சரிதான்! இதெல்லாம் என்ன பேச்சு? நேரமாச்சு. எனக்கு வழிவிடுங்கள்.” 'இல்லை, இதை நீ கேட்டுவிட்டுத்தான் போகணும். அன்றொரு நாள் நான் ஜிங்லிக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கையில் நீ காப்பி கொண்டு வந்தாய். டம்ளரை என் எதிரில் வைத்ததும் காப்பி கொஞ்சம் சிந்திற்று. நீ, தலையை ஒரு விதமாய்ச் சாய்த்துக் கொண்டு "hெ i am sorry!' என்ற அந்த நிமிஷத்திலிருந்து நீ எனக்கு உன் தடம் மாறிப் போனாய். நீலப் பொற்கிரணம் வீசினாற்போல் உன் ஒளிஆனால் உன் ஒளியை நீ அறியாமலே வளைய வந்ததே உன் ஒளியைப் பன் மடங்கு பெருக்கிற்று-நான் உங்கள் வீட்டு வாசற்படியை மிதிக்கும்போதெல்லாம் முகமனில் உன் தலை யசைப்பும். புன்னகையும்-ஹா! கோமதி, நீ ஏன் அப்பவே முகம் சுளித்திருக்கக் கூடாது?’ 'உம்மணாமூஞ்சிச் சுபாவம் எனக்குக் கிடையாது. உங்களிடம் மெனக்கெட்டு வந்து நான் குழையவுமில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/149&oldid=886266" இலிருந்து மீள்விக்கப்பட்டது