பக்கம்:தயா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 ត្វ நீங்கள் மணி என்ன?" என்று கேட்டால், அதுக்கு தான் , பதில் சொன்னால், அதுவே உங்களுக்கு இடம் கொடுத்தாச்சு என்கிறேனா?” "கோமதி, இதுதான் நமக்குள் வித்தியாசம், உனக்கு சாதாரணமாய் இருந்ததெல்லாம், எனக்குக் காய்ந்த பூமியில் பொழிந்த அமுத தாரையாய் இருந்தது. கோமதி, இனி என் றேனும் ஒருநாள், நான் உன் வீட்டுப்படியேறி வந்தால் உன் கணவனோ, உன் குழந்தைகளோ, என்னை 'வா” என்று வரவேற்பதைவிட நீ என்னை வாய் திறந்து வாங்கோ' என்று சொல்லாமல் என்ளை அடையாளம் கண்டுகொண்டு கனிவு காட்டும் உன் மெளனமான தலையசைப்புக்கே பெரிதும் ஏங்கி, வாசலிலேயே நிற்பேன், இந்த மனோ நிலை எனக்கு என்றுமே மாறாது; இது உண்மை. இது சத்தியம்.” 'ஐயையோ, இதென்ன என்னை ஏதேனும் வில்லங்கத் தில் மாட்டி விடாதேயுங்கள். நான் ஒரு பாவமும் அறியேன். பாட்டி என்னைப்பார்த்துப் பல்லைக் கடிக்கறதெல்லாம் என் நல்லதுக்குத்தான்னு புரியறது.' 'அப்படீன்னா ၇း • 'பாட்டி சொல்வா; நீ வெகுளி ன்னு நிரூபிக்கறதே. உன் முழு ஜோலியாய், உன் புக்ககத்தில் இருக்கப் போற அன்னா, அதைவிட வினையேவேண்டாம், கட்டினவன்கிட்ட என்னிக்குமே ஜாக்கிரதையா இருக்கணும். புருஷாள் நம்ம மாதிரி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப் படமாட்டா. ஆனால் அவாள் மனசில் களங்கம் விழுந்துடுத்தோ, அப்பறம் அந்த முள்ளின் வேரை யானைகட்டி இழுத்தாலும் அசைக்க முடியாது. அப்பறம் அந்தப் பெண் செத்துத்தான் தான் நிரபராதின்னு நிரூபிக்கணும். அதனால் எப்பவும் இதை யோசனை பண்ணிக்கோ: நான் வாழக்கத்துண்டேனா? என் நல்ல குணத்தை நிரூபிக்கக் கத்துண்டேனா?” கிழவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/150&oldid=886268" இலிருந்து மீள்விக்கப்பட்டது