பக்கம்:தயா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* di) மன்னி இருவரும் வண்டியிலிருந்து இறங்கும்போதே, நான் மாடி ஜன்னலின் பின்னிருந்து இவர்கள் என்னை வாழ்விக்க வந்தவர்கள் என்று கண்டு கொண்டேன், எனக்கு இப்படித் தோன்றுவானேன் என்று கேட்டால் என்ன சொல்வேன்? கல்கத்தா கரண்டி கைநழுவித் தரைமீது விழுந்ததும் எழும் கிண்கிணிக்குத் தனிக் காரணம் ஏது? அந்தத் தற்செயல்தான் காரணம். -'வா, வா, மாமிக்கு நமஸ்கரி இன்னும் ஜோடனை முடியவில்லையா? அவாளுக்கு வண்டிக்கு நேரமாச்சே!” இரண்டு கைகளிலும் டிபன் தட்டுகளுடன் அம்மா, அப்போதுதான் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

  • நன்னாயிருக்கு உங்கள் தமாஷ்! பெண்ணைப் பார்க்க வந்தவாள் வந்தவுடனே வந்தவாளிடமே அவா போறதைப் பத்தி ஞாபகப்படுத்தறது!' - -

"அப்படின்னா, அப்படின்னு அர்த்தமாடி? உங்கள் சுபாவத்தைத் தெரிவிச்சேன்-' “உங்கள் சுபாவத்தை என்ன சொல்லவாம்? நீங்கள் எப்போ விளையாடறேள், எப்போ வினை பேசறேள்னு உங்கள் இடக்கு எங்களுக்கே இன்னும் புரியல்லியே, சம்பந்தம் பண்ண வந்திருக்கறவாளுக்குப் புரிஞ்சுடுமா?” மழையில் நனைந்த குருவிபோல் கேலி வருத்தத்தில் அப்பா தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டதும் வந்தவ்ர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/155&oldid=886273" இலிருந்து மீள்விக்கப்பட்டது