பக்கம்:தயா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தயா 'உங்கள் தர்க்கம் எதுவோ. ஒண்னு நிச்சயம். இந்த ரயில் தப்பினால் எங்களுக்கு மறு ரயில் இன்னிக்கு இல்லை' என்றார் மாமி. "ஜாடை தெரிந்து கோள்ளவேண்டும்.” 'ஜடையை முன்னேயே தைத்திருக்கவேண்டும்’ என்று அப்பா பாட ஆரம்பித்துவிட்டார், "ஏதேது, இதுவும் சங்கீதக் குடும்பம் போல இருக்கு: பேச்சே பாட்டாய் வரதே!” இதுதான் சமயம் என்று மடக்கின ஆட்டுக்குட்டி போல நான் உள்ளிருந்து ஓடிவந்து நமஸ்கரித்து நின்றேன், 'வா, குட்டி, பக்கத்தில் உட்காந்துக்கோ. டே, சம்பத்! நன்னாப் பாத்துக்கோ. அப்புறம் ரயிலில் போற வழி யெல்லாம் அது சரியா, இது சரியான்னு என்னை அரிச் செடுக்காதே. உன் மன்னி சொல்லியனுப்பியதெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள். பெண்னே, உனக்கும் அதே வார்த்தைதான். அவா பண்ணி வெச்சான்னு ரெண்டுபேரும் பெரியவாளைக் குத்தம் சொல்லிண்டிருக்காதேங்கோ.” மாமி ஜாலிப் பேர்வழிதான். "என் பிள்ளை, நான் பெத்தது எனக்கு ராஜா. உன் கழுத்தில் கயிறு ஏறினப்புறம்தான், அவன் உனக்கு ராஜா, அதையும் சொல்லிப்பிட்டேன்.” - அவருக்கு என்னவாம் குறைச்சல்? மாமிக்கே என்ன குறைச்சல்? ராஜாவைப் பெற்றவள் ராணியில்லாமல் தாதி யாவாளா? கூடத்தில் முன்னேரத்திலேயே கவிந்துவிடும் இருளைப் போக்கத் தட்டிவிட்ட மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் மாமி தக்காளிச் சிவப்பில் ரஸத்துடன் தகதகத்தார். . - - "எங்கே, சுவாழிபேரில் ஒரு பாட்டுப் பாடேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/156&oldid=886274" இலிருந்து மீள்விக்கப்பட்டது