பக்கம்:தயா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 态碘j* கும்மிருட்டில், அதன் இசைக் கோடுகளின் ஸ்ன்னமான ஜ்வாலைகள் சற்று குரூரமான அழகுடன் ஒளிர்ந்து நெளிந்து ஒன்றுடனொன்று நெய்த கோலக் கூட்டினின்று எண்ணெய்க் குளியல் உலர்ந்து பிசுபிசுவென அடர்ந்து வங்கியிட்டு லேசான பொன்னிறத்தில் பொங்கிய கூந்தலலைகள் நடுவே ஒரு முகக்கோடு விளிம்பு கட்டிக் கொண்டு உருவாகி மிளிர்ந்தது...அட, நான் அவரை நினைக்க முயன்றால், இவள் எங்கு வந்தாள்? என் உள்ளுணர்வில் நான் கேட்ட இசையிலேயே உருவாகி, அதில் தன்னை மறந்த தவத்தில் கண்கள் மூடி யிருந்தன. வான் முகட்டில் இறங்கிய மழை மேகங்கள் போல் கன்னங்களின் மேல் தாழ்ந்த இமைகளின் அடிப் பாரத்திலிருந்துதான் உள் உறங்கும் விழிகளின் தன்மையை ஒருவாறு யூகிக்க முடிந்தது, நீண்ட ரப்பை மயிர்கள் நுனி சுருண்டு, |5سنة سك அரிவாள்கள் போல் கன்னச்சரிவில் தவழ்ந்தன. என் விழிகளைக் கசக்கிக் கொண்டேன். சீனாப் பொம்மை பேரில் வழுவழுத்த கன்னங்களின் பணி வெளுப்பு, அதைச் சூழ்ந்த ரோஜாத் திட்டுடன், இமைத்திரையை மெத்தென்று அடைத்துக்கொண்டது. தந்தி நாதம் மறுபடியும் செவியோரம் ஒதுங்குகையில், புலி நகங்கள் தொண்டையில் பிராண்டின. - யார் நீ அலோகி? ஆனியின் பொன்னான வெய்யிலில் மனம் உருகித் தவிக்கின்றது. போனவர் கடிதம் போடுவாரோ? அல்லது போடவே மாட்டார்களோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/164&oldid=886283" இலிருந்து மீள்விக்கப்பட்டது