பக்கம்:தயா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி #59 என்னைப் பார்த்துப் போனவர் மன்னியிடம் என்ன சொன்னாரோ? "அந்தப் பெண் வாயைக்கூடத் திறக்கவில்லை. திறக்க விட்டால்தானே? அந்தப் பிராம்மணன்தான் தாய்க் கோழி மாதிரி குறுக்கே விழுந்து தடுக்கிறானே!" மன்னி என்ன சொன்னாளோ? 'பெண் பாடாட்டாப் போறது. அத்தை, பேசு வாளான்னாவது தெரிஞ்சுக்க வேண்டாமா?" 'ஆப்படியே முடிவெச்சு ஆனாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை, பிராம்மணன் பலே கெட்டிக்காரன், ஆவணியில் தான் பண்ணுவானாம். கேட்டையோ? விட்டுத் தள்ளு.” இந்த மானஸப் பேச்சு கேட்டதுமே எனக்குப் பகீரென்றது. விட்டுத் தள்ளா? வயதில் மணமாகாத சினேகிதிகள் எனக்கு இருக் கிறார்கள். கலியாணம் ஆகாதா ஆகாதா எனக் காத் திருந்து காத்திருந்து ஆவல் இற்றுப் போய், கடைசியில், யார் வந்தாலும் சரி-வாழ்வு தந்தால்போதும் எனும் ஏக்கத்தில் வயதிலேயே வதங்கிவிடும் கதி எனக்கு நேராமல், இருக்கணுமே! பெண்ணாய்ப் பிறந்தவள் சொந்த வீட்டுக்காரன் மாதிரி. சொந்த வீட்டுக்காரனுக்கு வீடு பிடித்ததோ பிடிக்கவில்லையோ. அவன் வீடு ஒரு வீடுதான். குடி யிருப்போருக்கு எந்த வீடு பிடித்ததோ, அதுதான் கணக்கு. நியாயமும் அதுதானே? ஆனால் மன்னி என்ன சொன்னாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/165&oldid=886284" இலிருந்து மீள்விக்கப்பட்டது