பக்கம்:தயா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி #61 விட்டுப் போச்சா? நமக்கு இருப்பது ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு-" - அப்பா, சீட்டின் மேல் வைத்த கண் மாறாமலே, "அதுவும் பொண்ணு-" "அது சரி, சொல்லமாட்டேளோ? சரி, அதுக்கு நீங்கள் பண்ணினது என்ன தட்டுக் கெட்டுப் போச்சு? எதுக்கும் எல்லாத்துக்கும் தலையில் அrதையைப் போட்டுண்டு நானல்லவோ கிளம்ப வேண்டியிருக்கு எத்தனை நாளைக்கு உங்கள் ஆட்டம் இப்படியே செல்லும்னு நினைச்சுண்டி ருக்கேள்? எத்தனை பேர் என்னைக் கேக்கறா தெரியுமா? - 'ஏண்டி முகூர்த்தத்தைக் குறிச்சுக்கூட எழுதிட்டேளே. உங்காத்து மாமா சும்மா உக்காந்திண்டிருக்காரே! இந்த ரீதியிலே ஐப்பசியிலாவது நடக்குமா? இல்லை, தைக்குத் தள்ளிண்டு போயிடுவேளா?'ன்னு!” அப்பா சுவாரஸ்யமாய் சீட்டை மாற்றி வைக்கிறார். அப்பா, உங்களைக் கரிக்கிறேன். என்னதான் ஆண்களுக்கு ஆயிரம் நாங்கள் அடங்கினவர்கள் ஆனாலும் எங்களுக்குரிய மரியாதை எங்களுக்குக் கிடையாதா என்ன? "உண்மையைச் சொல்லுங்கள், கலியாணத்துக்குப் பணம் கொடுக்கறவன் கொடுக்கப்போறானா இல்லையா? இல்லை, நீங்கள் வாங்கி இட்லியும் சட்னியும் சொஜ்ஜுமாவே கரைச்சிட்டு நிக்கறேனா?” ஊஹாம், அப்பா அசைஞ்சு கொடுக்கக் காணோம். பால் தீய்ந்த நாற்றம் திடீரென மூக்கைப் பொசுக்கு கிறது. தலையில் அடித்துக்கொண்டு வைதவண்ணம் அம்மா உள்ளே ஓடுகிறாள். - கலியாணம் விசாரிக்க மாமிகள் வருகின்றனர், 認一惠馬

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/167&oldid=886286" இலிருந்து மீள்விக்கப்பட்டது