பக்கம்:தயா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió2 இந்த நாளில் எங்களது எல்லாம் எங்களுக்கு மேல் மாமியாய், குதிர் குதிராய் நிக்கறத்துக்குப் பாலாவுக்கு இவ்வளவு சுருக்கக் கூடினது அவள் செய்த புண்ணியம்தான். ஆனால் ஒண்ணு-நான் சொல்றேன்னு நினைச்சுக்காதே, அகிலா! நிச்சயம் பண்ணியாச்சுன்னு மீசையை முறுக்கறத் துக்கு இல்லை. கலைக்கிற மந்திரிகள் எங்கேயும் இருக்கா. கழுத்தில் தாலி ஏர்ற வரைக்கும் எதுவுமே நிச்சயமில்லை. அத்தனை நாள்வரைக்கும் அவாளுக்கு ஏன் விட்டுக் கொடுக்கனும்? நீங்கள் பார்த்திருக்கிறதை விடக் கிளியாய்ப் பெண்ணை வெச்சிண்டிருக்கேன். குயிலாய்ப் பாடுவாள். எல்லாம் ரெடி. நாளைக்கே பண்ணிடலாம். அந்தப் பெண்ணைப் பத்தி உங்களுக்கென்ன கவலை? எவனாவது கட்டறான். முன்னே பின்னே - அவ்வளவுதானே? அப்படிம்பா.” என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. "ஆமா மாமி, பாட்டி சொல்றது. வாஸ்தவம்தான். கேவலம் அம்பது நூறிலே கடைசி நிமிஷத்தில் எத்தனையோ சம்பந்தம் பிரண்டு போயிருக்கு. தாரைவார்த்துக் கொடுத்த பிறகு தாலி கட்டற நேரத்துக்குள்ளே தகராறு வந்துடுத் தாம், கேஸ் கோர்ட்டு வரைக்கும் போச்சாம்,' 'நீங்கள் சொல்றது எனக்குப் புரிஞ்சு நான் என்ன பண்றது? யாருக்கோ கலியாணம்னு இவரைப் பத்திரிகை வெச்சு அழைக்கணும்போல் பிராம்மணன் ஹாய்யா இருக்காரே!” 'பாலா தலையில் என்ன எழு தியிருக்கோ ஒண்ணு நிச்சயம். ஒருவர் . தாலியை இன்னொருத்தன் கட்ட முடியாது.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/168&oldid=886288" இலிருந்து மீள்விக்கப்பட்டது