பக்கம்:தயா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #73 எல்லாம் தம்தம் தனித்தனி அடையாளங்கள் குலைந்து, ஒரே மொத்தாகாரமான உடைப்பின் பெருக்காய்த் தோன்றின. தன்னையழுத்தும் வயிறு கணம் தளர்ந்து, தன் கனமுமிழந்து, இறகு இலேசில் தான் மிதப்பது காற்றிலா துரக்கத்திலா? - இந்த நெகிழ்ச்சி நிலையில்தான் அந்தச் சத்தம் அவளை எட்டிற்று. அது நேரிடையாய் வந்து அவள்மேல் மோதவில்லை. தான் உணர்ந்த இந்தப் பேருருகலின் தொப்புளிலிருந்து இழை நூற்றபடி வெளிவந்து கொண்டேயிருக்கும் ஒரு நுட்ப ஓசை, காற்று தன்னைத்தானே கடைந்துகொள்ளும் ஒரு சுழிப்பு, வெளியேறிய மூச்சு, திரும்ப உள்ளுக்கு வாங்கும் வழி பிசகி, மிரண்டு, திசை தப்பித் தவிப்பதுபோல் ஒரு ரீங்காரம் வீங்கிக்கொண்டே உள் வந்து கூட்டத்தில் கிறுக்கி வட்ட மிட்டது. - இப்போதெல்லாம் தன்னை அடிக்கடி வருத்தும் வாந்திக்கும் குமட்டலுக்கும் முன்னறிவிப்பாய், கண்ணி ருட்டலில் காதின் 'குப்படைப்பென்று முதலில் நினைத்தாள். இல்லை, தன் வயிறுதான் விரிசல் காண்கிறதா? தொப்புளைத் திருகிக்கொண்டு கிளம்பிய பயங்கரத்தில், மயக்கத்திலிருந்து வெடுக்கென விழித்துக் கொண்டாள். 'ரொய்ஞ்ஞ்ஞ் அவள் பயத்துடன் அவளைப் பிணைக்க மேலும், மேலும் அவள்மேல் விழும் கயிறுபோல் சத்தம் அவளைச் சுற்றி வளைத்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு முழு விழிப்பை அடையுமுன் அவளை விட்டகன்று வெளியேறி, எட்ட எட்ட ஒப்ந்து மறைந்தும் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/179&oldid=886300" இலிருந்து மீள்விக்கப்பட்டது