பக்கம்:தயா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் இலை ஆடவில்லை என்றால் ஆடவில்லை. படுக் கையில் புரண்டு புரண்டு விரிப்பு முதல் ஆவி கக்கிற்று. அப்புறம் தாங்க முடியவில்லை. மொட்டை மாடிக்கு வந்து உலவ ஆரம்பித்தான். மேகங்கள் மதில்களாய் எழும்பி வானத்தை அடைத்து, நிலவை மறைத்து, காற்றையே சிறையிட்டு விட்டன. புழுக்கத்தில் மூச்சு திணறிற்று. தோட்டத் தில் தூரத்து மரங்களின் இலைகள், பதுங்கிய மிருகங் களின் உரோமம் போல் சிலிர்த்துக்கொண்டு அசைவற்று அவள் இன்னமும் சாதகம் பண்ணிக்கொண்டிருந் தாள். எப்படிப் பண்ணுகிறாள், பாட்டே தன் பிரான 6:fi: மூச்சுப்போல்: அம்மாதிரியான சாதகத்தைக் கேட்கையிலோ, பார்க்கையிலோ, மனத்தில் அச்சம்தான் தட்டுகிறது. பாட்டுக்கூட பிடிக்கவில்லை. பாட்டென்றால் அவனுக்கும் உயிர் என்றிருந்த நாளும் உண்டு. சுமாரா யும் பாடுவான்; அவனையும் பாட்டில் விட்டிருந்தால் உருப்பட்டிருப்பானோ? ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்க்கையில் էքf: Լորր «:յ6:16*63: வேணுமென்றே உருப்பட வைக்கவில்லை. என்று தோன்றிற்று. வீட்டோடிருந்து கொண்டு தன் பெண்ணுக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கவே தனக்குள் அவனை நியமனம் பண்ணிக்கொண்டு விட்டார் என்றுதான் பட்டது. மாமா பலே கைக்காரர். ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லை. ஒன்றும் தெரியவும் தெரியாது. சிறு வயதிலேயே தகப்பனில்லை. தாய் குழந்தையைக் கையிலேந்திக்கொண்டு அண்ணனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/33&oldid=886331" இலிருந்து மீள்விக்கப்பட்டது