பக்கம்:தயா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3o தயா மாய்ச் சோம்பலுடன் திரும்பிற்று, விசித்திரங்கள் நெய்த வெண்பட்டுத் துணிதைத்த படிக்கட்டுகள் எதிரே எழும்பின. அவன் ஏற ஏற, அவை வானத்தின் உச்சியிலேயே முடிந்த மண்டபத்துள் சிவப்புச் சால்வை போர்த்தமேடை மேல் அவள் உட்கார்ந்து கொண்டு கருதி மீட்டிக் கொண்டிருந் தாள். ஊசிமத்தாப்பிலிருந்து உதிர்ந்த நக்ஷத்திரங்கள் போல் அவள் கண்கள் ஜ்வலித்தன. புன்னகையிலிருந்து தலைய விழ்ந்த இதழ்கள் விழுந்து கொண்டிருந்தன. அவளுக்குப் பின்னால், விடி நேரத்தின் செவ்வானம் நாகப்படம்போல் விரிந்து எழும்பியது. சாருவா? அப்படி அவளைக் கண்டதன் உள்ள எழுச்சியில் தொண்டையை அடைத்தது. சோ.ரூ!’ அவளை அழைத்ததுதான் தாமதம். மண்டபம் இடிந்தது; செவ்வாணம் வெடித்து நீலரத்தம் கோணக்கோடு களில் கிளை பிரிந்து கொண்டு வழிந்தது, அலறக்கூட நேரமில்லை. மண்டபத்தின் கோபுரம் தன் மேல் இறங்குவதை உணர்ந்தான். வான் வரை வளைந்து வளைந்து ஓடிய படிக்கட்டுகள் சீட்டுக்கட்டாலாயன போல், அடியோடு தகர்ந்து வீழ்ந்தன. திடீரென மையிருள் அவனைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மதில்களாய் எழும்பி நெருக்கின, அவனின்று வீறலாய் எழுந்த அவன் குரலே, தனி உருப்பெற்று வேற்றுமையுடன் உறுமியது. "ஜோ" வென்று இன்னொரு இரைச்சல். அதன் அர்த்தம் விளங்க வில்லை. தூரத்திலிருந்து கிட்டக் கிட்ட நெருங்கிக் கொண்டே வந்தது. தூரத்திலிருந்து கூடிக் கொண்டே வரும் நெருக்கத்தின் பயங்கரம் தாங்கவே முடியவில்லை. எதிரில் கண்டவையெல்லாம், வீடு, குடிசை, செடி, கொடிய மரங்கள் எல்லாவற்றையும் வேருடன் அழித்துக் கொண்டு சவங்கள் மிதக்க, அவனை நோக்கி. கக்கலும் கரைசலும் வண்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/36&oldid=886334" இலிருந்து மீள்விக்கப்பட்டது