பக்கம்:தயா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தயா இத்தனை நாள் என்று நினைத்துக் கொண்டிருந் தோம். ஆனால் எத்தனை நாளென்று இப்போத்தானே புரியறது.” 'எனக்குப் புரியவில்லையே. நீங்கள் சொல்றது.” 'வேதனையே இதுதான். எதுதான் புரிகிறது? புரியவில்லை என்று எதைத்தான் செய்யாமல் இருக்க முடிகிறது? சாரு நீயே வேறு உலகம், நானும் வேறு உலகம்; இனி-’’ "எனக்கு புரிஞ்சு போச்சு இப்போ- பாய் மேல் கையை அறைந்து கொண்டு ஆவேசத்துடன் கத்தினாள். அவள் முகம் கறுத்துவிட்டது. “எனக்கு கண்ணவிஞ்சு போச்சுன்னு என்னென் ேைவாஎன்னை யறியாமலே என் கண்ணெதிரிலேயே நடந்துண்டிருக்கா? எந்த முண்டை உங்களை மயக்கி யிருக்கா? உம்கள் மண்டையிலே உண்டையை வெச்சுத் தேச்சிருக்கா? சொல்லிடுங்கோ, உண்மையைச் சொல் விடுங்கோ. ஒஹோ? இவ்வளவு தூரத்துக்கு முத்தி டுத்தா?” - இப்படிப்பட்ட வார்த்தைகள்கூட அவள் வாயி விருந்து வரக்கூடும் என்று அவன் நினைக்கவில்லை. இப் படியும் அவள் நினைக்கக் கூடும் என்று அவன் நினைக்க வில்லை. அந்த ஆச்சரியத்திலேயே அவன் பேச்சிழந்து விட்டான். அந்தச் சொற்ப நேரத்துக்குள். அவனில் கடைந்த எண்ணச் சூழலில் குப்பையும் கூளமும் போல், ஒன்றுக் கொன்று சம்பந்தமற்ற ஞாபகங்கள் எழுந்து மிதந்து ஒவ்வொன்றாய் மறுபடியும் அமுங்கிப் போயின, முதலில் வீட்டு வேலைக்காரியின் உருவம் எழுகிறது. வென்னீருள்ளில் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவசரமாய் அங்கு நுழைய ஒரு சமயம் நேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/44&oldid=886343" இலிருந்து மீள்விக்கப்பட்டது