பக்கம்:தயா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி - 43 சாரு' எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை அவள் கனம் அழுத்திற்று. . "நான் சொல்றத்தை முழுக்க வாங்கிக்கோங்கோ, உங்களுக்கு யார் மேல் ஆசையோ, அவளைக் கொண்டு வந்து ஆத்தோடு வைச்சுக்கோங்கோ, எனக்குத் தங்கையா யிருந்துட்டுப் போகிறாள். எனக்குத் தங்கையில்லை.” "சாரு அப்படியெல்லாம் இல்லேடி!" 'இல்லை, பரவாயில்லைன்னுதான் நான் சொல்றேனே. எங்கே உங்கள் கையைக் காண்பிங்கோ. நான் கையடிச்சுச் சொல்றேன். வந்தவளைச் சீன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். ஏன் இப்படி பண்ண லே'ன்னு ஒரு வார்த்தை அதிர்ந்து கேட்கமாட்டேன். ஆனா நீங்க மாத்திரம் என்னை விட்டுட்டுப் போயிடாதேங்கோ. நீங்கள் எனக்கு வேணும் நீங்கள்தான் என் தைரியம்- அவள் மூச்சின் இறைப்பில் அறை அதிர்ந்தது. 'சாரு!-' o அவன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு 'ஹோ வென்று அலறினாள். கழுத்தில் கத்தி விழுந்துவிட்ட மிருகம்தான் அப்படித் தன் கடைசிக் கத்தலில் அலறும். அவனுக்கே சஹிக்க வில்லை. அவளை இழுத்து மார் மேல் சாத்திக் கொண்டான். கூந்தல் அவிழ்ந்து துவண்டு சரிந்து அவன் தோள் மேல் விழுந்தது. அவள் கண்ணிரைத் துடைக்க முயன்றான். அவள் அப்பொழுது ஒரு பெரிய குழந்தையாய்த்தானிருந்தாள். 'என்னடி சாரூ! நான் செத்துப் போயிட்ட மாதிரி அழறே?” "நீங்கள் செத்துப் போக...ல்லென்.ன்னு சொல்லுங்- - உங்-கோ-ஒ ஓ ஒ!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/49&oldid=886348" இலிருந்து மீள்விக்கப்பட்டது