பக்கம்:தயா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 薬包ifr g7・リー。一ゲーgr〜広ー" கண் மறுபடி திறக்கையில் பொழுது நன்றாய் விடிந் திருக்கிறது . கீழிருந்து மேலே சுழன்று கொண்டே வரும் சுருதி நாதம்தான் அவனை எழுப்பிற்று அவள் குரல் இன்னம் சுருதியைத் தொடரவில்லை. வெறும் சுருதி நாதம்தான். தன்னை உதறிக்கொண்டு எழுந்தான். பல்லை விளக்கி விட்டு உடனே ஸ்னானமும் பண்ணினான். குழாயிலிருந்து ஜலம் காலை வேகத்துடன் கனமாய்க் கொட்டுகையில் உடலில் சோர்வு தெளிந்தது. வென்னீருள்ளிலிருந்து பார்க்கையில் தோட்டத்துப் பச்சையும் ஆகாயத்தின் முழு நீலமும் கண்களுக்கு இதமாயிருந்தன. அவனுக்கே புரியாத ஓர் உற்சாகமும் பரவசமும் தம் சுழற்சியில் பிடித்துக் கொண்டன. ஜலத்துளிகள் மார்புடைப்பிலும் தோள் புடைப்பிலும் முத்துக்களாய் நின்றன. மெட்டு ஒன்றை முனகிக்கொண்டே உடுத்திக் கொண்டான். சமையலறைக்குச் சென்றான். சமையல்காரப் பாட்டி உருத்திராக காலையை உருட்டி ஜடம் பண்ணிக் கொண்டிருந்தாள். "என் காப்பி ஆறிப்போயிடுத்தா? பரவாயில்லை கொடுங்கோ-' 'இப்போத்தான் சாருகிட்ட கொண்டு போய் வெச்சேன். அவளும் குடிக்கல்லே-'

"ஒ" சரிசரி எப்படியும் அவளிடம் விடை பெற்றுக் கொள்ள வேண் டாமா?" சாருவின் அறையை நோக்கிச் செல்கையிலேயே, தம்பூரின் மீட்டல் அலை துரை போல் பொங்கி வழிந்தது, "சாருவும் ஸ்னானம் பண்ணிவிட்டாள். முடியாது உலர விட்டிருந்த கூந்தலில் அற்புதமான அழகுடன் ஒரு பூவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/52&oldid=886352" இலிருந்து மீள்விக்கப்பட்டது