பக்கம்:தயா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் சட்டையைக் கழற்றி ஆணியில் இன்னும் மாட்டி பாகவில்லை. 'இன்னிக்கு உங்கள் அருமந்தப் பிள்ளை என்ன பண்ணான் கேளுங்கோ' ஸ்ாரங்கன் ஒன்றும் கவலைப்படுகிற மாதிரி தெரிய வில்லை. தன் விளையாட்டுச் சாமான் கூடையிலிருந்து ஒவ்வொரு சொப்பா யெடுத்து ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிக் கொண்டிருந்தான். "வேறென்ன உனக்கு வேலை? அதைப் பண்ணான்னு' இதைப் பண்ணான்னு எதையாவது சொல்லிண்டு!” "தினம் போலில்லை இன்னிக்கு அவன் பண்ணது.” தினம் போல் எதுவும்தான் இல்லை இன்றைக்கு. மூணு நாளாவே இல்லை. என்றைக்குத்தான் ஒன்றே போலிருக்கிறது? ஒன்றுதான் ஒன்றேபோல் இருக்கிறது. ‘இன்றையப்போது இன்று, நாளையப்போது நாளைக்கு." ஆபீஸில் ஹெட் கிளார்க்கின் உதடுகள் எப்பவும் அசைந்துகொண்டேயிருக்கும். வந்த புதிதில் வியப்பாய் இருந்தது. ஏதாவது நரம்புக் கோளாறா? அவன் கவனிப்பதை ஒருநாள் பார்த்துவிட்டார். முகத்தில் வழிந்த அசடை கையால் மறைக்க முயனறான, "ஒண்னுமில்லே ஸார் நீங்கள் ஏதோ சொன்ன மாதிரியிருந்தது எங்னைக் கூப்பிட்டேளோ என்று'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/54&oldid=886354" இலிருந்து மீள்விக்கப்பட்டது