பக்கம்:தயா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - தியா "அதெல்லாம் எனக்கென்னத்துக்கு?” "வாஸ்தவந்தான். எவன் எக்கேடு கெட்டாலும் உனக்கு உன் காரியம் ஆகணும் அதானே!” "நான் என் டுட்டி செய்யறேன். நீங்க உங்க டுட்டி: செய்யுங்க ஸார், இந்தக் கதையெல்லாம் எதுக்கு? துரை கூப்பிட்டார்; வந்து சொன்னேன். போறதுன்னா போங்க. இல்லாட்டி, உங்களுக்கு இஷ்டமில்லேன்னு போய்ச் சொல்வி டறேன். என்ன முளிச்சிப் பாக்கிறீங்க? ஐயையோ பெல் அடிச்சிட்டாரே? என்னை ஏன் ஸார் பேச்சிக்கிளுத்து நிறுத்தி வைச்சிட்டீங்க?’-தலையிலடித்துக் கொண்டு ஓடினான். நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றான். S. E. எதிரில் கிடந்த ஆஜர்ப் பதிவுப் புத்தகத்திலிருந்து நிமிர்ந்தார். எப்படி இந்த மனுஷன் ஒரு நாளைப் போல் அலுக்காமல் தினம் முக ஷவரம் செய்து கொள்கிறான், நமக்கு ஒருநாள் விட்டு ஒருநாளே கை வரமாட்டேன் என் கிறது. கத்தியை வைத்தாலே பிராணன் போகிறது, ஒரு மாசு மறு இல்லாமல், கன்னமும் மோவாயும் நீலச்சலவைக் கல் மாதிரி வழவழென. ஒருநாளைப்போல் எப்படி இவ்வளவு உயர்ந்த துணி, உடை நலுங்காமல், புத்தம் புதிதாய்-nணி மாவில் விளம்பரம் பார்த்த ஞாபகம் வந்தது. பாரீஸ் பெப்பர் மிண்டு-கைபடாது செய்யப்படுவது. பாகிலிருந்து பதமாகி, அச்சாகி, ட்ரேஸ் காகிதத்தில் சுருட்டும் வரைஎந்த இயந்திரம் ஆபீஸர்களை உற்பத்தியாக்கி வெளியே தள்ளுகிறது? “நீர்தானே ஸ்ம்பத்' 盛外 ஆமாம் 6YUf叠° 戏 சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் லேட்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/58&oldid=886358" இலிருந்து மீள்விக்கப்பட்டது