பக்கம்:தயா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 $gir? யாரை மனதில் வைத்துக்கொண்டு, அப்பா turrířGtné) கோபம் கொள்கிறார் என்று சமயங்களில் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றுவதுண்டு;தன் எதிரிகளை அவ்வப்போது தன்னிலேயே ஆவாஹனம் பண்ணிக்கொண்டு தன் மேலேயே ஆவேசங் கொள்வதிலேயே அப்பாவுக்குத் தனிக் குஷியோ? கோபத்தை ஒத்திகை பார்த்துக் கொள்கிறாரோ? வந்த கோபம் வந்ததுபோலவே சட்டென விட்டது. என் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, 'அம்மாவைப் பார்க்கப் போவோமா?' என்கிறார். வளை மாடியேறி ஒரு அறையுள் நுழைகிறோம். மேகத்தின் பின் நிலவு ஒளிந்தாற்போல், அறையில் நீல இருள் சூழ்ந்திருக்கின்றது, 'பாலசந்திரா!' இம்மாதிரி இக்குரலில் என் பெயர் கேட்டு எத்தனை வருடங்களாகிவிட்டன என்று தோன்றுகையிலேயே, என் கண்கள் சர சரவென நிறைந்துவிட்டன. "பாலு.'

      • #rrgggŘr.**

"மிஸ்டர் சந்தர்,” உரிமையுடன் ஓரிருவர் என் உடல் மென்மையைக் கேலிசெய்ய. பால்ா!' 'ஏடி பாலம்மா!' என இத்தனை நாட்கள் அழைத்துப் பிறை தேய்ந்து போனபின், இவ்வறையின் இருளிலிருந்து அசரீரிபோல் அம்மாவின் தீனக்குரலில் என்னிடம் என் முழுப்பெயர் திரும்பி வருகையில், நானே ஏதோ கிரஹணத்தினின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/80&oldid=886383" இலிருந்து மீள்விக்கப்பட்டது