பக்கம்:தயா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தியா நாங்கள் ஒருவருக்கொருவர், தம் தமக்கே ஒப்புக் கொள்ளாத உண்மை. - என்னைப் பெற்றெடுத்ததே சாக்காய்; நான் அவளுடைய மெது யமனாய் வாய்த்து விட்டதை நினைத்து புழுங்கு கையில் என்னையே எனக்கு வேண்டியில்லை. ஆனால் ஊசலாடும் தன் உசிரை அவள் என் மேலேயே விடுவது காணக் காண இன்னும் நெஞ்சையறுக்கிறது. "என்னப்பா பாலு செளக்யமா?" குரல்கேட்டுத் திரும்புகிறேன், சாலா மாமி இரண்டு கைகளிலும் இரண்டு டிபன் தட்டுகள் ஏந்தி நிற்கிறாள். 'படிப்பு படிப்புன்னு வருடக் கணக்கில் போய் உட்கார்ந் துட்டியே எங்களை மறக்கக்கூட நாளாச்சு!" மாமி குரல் கம்மியது காண எனக்கு நெஞ்சு நெகிழ்கின்றது. மாமி-நா என்ன, எங்கள் குடும்பமே உங்களை மறக்க முடியுமோ? ஆனால் ஒருவேளை நீங்கள் ஞாபகமூட்டுவது போல் மறந்து போனோமோ என்னவோ? உயிரோடு இழையும் மூச்சு எப்பவும் ஞாபகத்திலேயே இருக்கிறதா? மூச்சு தடைபடும் போது தானே மூச்சின் நினைவு? நினைவே மூச்சாய்த் தவிக்கிறது. அம்மா படுத்த படுக்கையாகிவிட்டபின் வீட்டில் உள்ள அரிசியைச் சாதமாய்ப் பொங்கிப்போட யாருமிலாது குடும்பம் தவித்துக்கொண்டிருக்கையில், எங்கள் கஷ்டம் விடியவே போல், மாமி தனக்கும், தன் கையில் குழந்தைக்கும் திக்கிலாது வந்து சேர்ந்தாள். இதெல்லாம் சொல்லத்தான் கேள்வி. எனக்கே தெரியாது, எனக்கு நினைவு தெரிந்து, நான் என் தாயின் மடி அறியேன்; ஆனால் சாவா மாமிதான் எனக்கு மறுதாய்! என் தாய்க்கு செவிலித்தாய், அம்மாவுக்கு மலஜலம் முதல் எடுத்து, துணி மாற்றி, ராக்கண் விழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/82&oldid=886385" இலிருந்து மீள்விக்கப்பட்டது