பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44



கண்டனம் தெரிவிப்பது போல் அவன் குரல் ஒலித்தது.

'மாசிலாநாதர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அது நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால், அங்கேதான் இந்த ஆராய்ச்சியை நடத்துகிறோம். அதனால் அந்த ஆலயத்தைப்பற்றிப் பேசவே இல்லை' என்று தெளிவாகச் சொன்னான் சுந்தரம். 'நாளை புதையல் கிடைத்துவிடும் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம்' என்று அவன் மேலும் விளக்கினான்.

'கண்ணகியை அந்த ஜிப்ஸிகள் ஏன் கடத்திச் சென்றார்கள் என்பது இப்பொழுது புரிந்துவிட்டது. ஆராய்ச்சி நடக்கும் இடம் தெரியாதாகையாலும், மறுநாளே அந்த ஆராய்ச்சியில் வெற்றி காண்போம் என்பது தெரிந்ததாலும், கண்ணகி என்ற ஒரு சிறு பெண்ணிடமிருந்து சுலபமாக அந்த ஆராய்ச்சி எங்கு நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் என்பதே அவர்கள் நோக்கமாய் இருக்கவேண்டும்' என்றார் வடிவேலு.

போலீஸ் ஜவான்களைக்கொண்டு கண்காணித் தால் அந்த ஜிப்ஸிகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அதுவரையிலும் நாம் பொறுத்திருக்க வேண்டியதில்லை. ஒழுகை மங்கலம் மாரியம்மன் திருவிழாவுக்கு நேராகச் சென்று ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை கண்ணகியை அங்கே கண்டு