பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50



எவ்வாறு சுடாமல் இருக்கும்?' என்று தனது ஆவலைத் தெரிவித்தான் சுந்தரம்.

"ஆமாம், ஒருவேளை ஜிப்ஸிகளுடன் கண்ணகி யும் அங்கு இருக்கலாம்' என்றான் தங்கமணி.

தங்கமணி நினைத்தது உண்மையாயிற்று. ஆனால் அங்கு எல்லாரையும் விலக்கிக்கொண்டு செல்லுவது தான் மிகுந்த சிரமமாக இருந்தது. நல்ல வேளை, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இருந்தார். அவருடன் போலீஸ் ஜவான்களும் இருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டவுடனே மரியாதையாக வழிவிட்டார்கள். தங்கமணியும் அவன் தோளிலே வீற்றிருக்குப் ஜின்கா என்ற குரங்கும் ஆவலோடு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

ஜிப்ஸிகளின் கூட்டம் எப்படியோ முண்டி யடித்துக்கொண்டு பூக்குழிக்கு மிக அருகிலே இடம் பிடித்துக்கொண்டுவிட்டது. முதலில் அந்த ஜிப்ஸிகளின் கூட்டத்தில் கண்ணகியைக் கண்டு பிடிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. ஜின்காதான் கண்ணகியை முதலிலே அடையாளம் தெரிந்து கொண்டது. ஜிப்ளிகளின் அலங்கார ஆடைகளில் அவள் காணப்பட்டதால் அவளும் ஒரு ஜிப்ஸியாகவே தோன்றினாள். கூர்மையான பார்வையுடைய தங்க மணிக்குக்கூட முதலில் அவளை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.